தாடி வளர்த்தபடி வீட்டுக்குள் முடங்கிய சஜித் பெற்ற முஸ்லிம் வாக்குகளில் 40% மஹிந்த தரப்புக்கு மாறிவிடுமா?
2019 ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு ஆதரவளித்து தோல்வி கண்ட இரண்டு முஸ்லிம் கட்சிகளும் எதிர்வரும் மே 2020 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டமைத்து தேர்தல் கேட்கும் வாய்ப்பே அதிகமுள்ளது.
சஜித் தாடி வளர்த்தபடி வீட்டுக்குள் முடங்கி கிடப்பதாகவும் தகவல் உள்ளது.ரணில் கட்சியின் தலைவராகவும் எதிர்க்கட்சி தலைவராகவும் நிலைத்தால் இவ்விரு கட்சிகளின் கதை கந்தலாகி கிழிந்து தொங்கிவிடும்.இக்கட்சிகளின் தலைவர்கள் ரணிலை ஓரங்கட்ட எடுத்த நடவடிக்கைகளை இலகுவில் மறப்பாரா ரணில்?
இக்கட்சிகள் இரண்டும் இணைந்து கூட்டமைத்து தனியாக தேர்தலில் களமிறங்குவதிலும் ஓர் இக்கட்டு உண்டு.
கூட்டணியின் செயலாளரே அதிகாரமுள்ளவர் என்பதனால் எக்கட்சியின் உறுப்பினர் கூட்டமைப்பின் செயலாளர் என்பதில் உடன்பாட்டை எட்டுவது கடினமாகும்.இவ்வுடன்பாடு எட்டப்பட்டாலும்; இவ்விரு கட்சிகளின் தலைவர்களும் கூட்டமைப்பினூடாக எந்த மாவட்டத்தில் வேட்பாளர்களாக களமிறங்குவது என்பதில் இழுபறி ஏற்படும் நிலை உள்ளது.ஏனெனில் அவர்கள் வெற்றி பெற வாய்ப்புள்ள மாவட்டங்களைத் தேடிப்பிடிப்பது முயற்கொம்பாகும்.
கண்டியில் கிண்டியும் கிடைக்காது. மன்னாரில் முன்னர் போல் இனி வாய்ப்பில்லை. ஜனாதிபதி தேர்தல் முடிவின் பின் உடனடியாக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நவம்பர் 26 இல் சஜித் பெற்ற முஸ்லிம் வாக்குகளில் 40% மஹிந்த தரப்புக்கு மாறிவிடும் என்பதனால் மேற்சொன்ன களநிலையை தலைவர்கள் எதிர்கொண்டேயாகவேண்டும்.
அடுத்த நாடாளுமன்றில் இரு தலைவர்களும் உறுப்பினர்களாக இல்லாதிருக்கவும் கூடும்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்கும் தேசியப்பட்டியல் உறுப்புரிமைகளில் ஒன்றைத்தானும் இவ்விரு கட்சிகளுக்கும் ஐ.தே.கட்சி வழங்கமாட்டாது. ஏனெனில்; இக்கட்சிகளும் இவற்றின் உறுப்பினர்களும் தேர்தலின் பின்னர் மஹிந்தவின் அரசாங்கத்துடன் இணைந்து விடுவார்கள் என்ற பயம் அக்கட்சிக்கு உண்டு.
தேர்தலில் வெல்வதற்கு ஐ.தே.கட்சியை பாவித்துவிட்டு அரசமைக்கும் தரப்புடன் இணைந்து அமைச்சர்களாவது இவர்களின் கடந்த கால வரலாறு என்பதை பச்சைக் கட்சி அறியாததல்ல.
தலைவர்களையும்,கட்சிகளையும் "அம்போவென" தள்ளிவிட்டு தன்னோடு தனித்தனியாக இணைய வரும் இவ்விரு கட்சிகளிலும் வெல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்களை மஹிந்த இணைத்துக்கொள்வார் என நம்பலாம்.அவருக்கும் நாட்டை ஒற்றுமையாக கொண்டு செல்ல ஒரு வியூகம் தேவையல்லவா? உலகுக்கு காட்ட சுட்டுவிரல்கள் சில வேண்டுமல்லவா?
Basheer Segu Dawood
Eastern paksa better only for there.always rmeach others jelouys and fighting in social media.baseer rishard hakeem hasnali all of you muslims.nor buddhist.issadeen tour intension allahi akbar
ReplyDeleteEwan oru mental
ReplyDeleteஅடுத்த நாடாளு மன்ற தேர்தலில் முஸ்லிம்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கும். தெற்கு முஸ்லிம்கள் சிறுபாண்மை இனத் தன்மையோடு எப்பவும் இரு பெரும் சிங்களக் கட்ச்சிகளோடு பயணிப்பவர்கள். அவர்கள் பொருத்தமான படகில் மாறி பயணிப்பார்கள். சிங்கள கட்ச்சிகளின் படகில் பயணிக்கும் அவர்களிடம் இழக்க தனிக் கட்சி அரசியல் இல்லை. தமிழர் கட்ச்சிகளைப்போல முஸ்லிம் கட்ச்சிகளும் வடகிழக்கில் மையப்பட்டுள்ளன. தமிழர் தேசிய இனக் கட்சிகளைப்போல வடகிழக்கு முஸ்லிம் கட்ச்சிகளும் தனிக் கட்சிகளையும் தலைவர்களையும் சின்னங்களையும் வைத்திருக்கிறது. ஆனால் தேர்தல் என்று வந்தால் வடகிழக்கு முஸ்லிம் கட்சிகள் தங்கள் தலைமையை சின்னங்களை பிரபலப்படுத்தாமல் சிங்கள கட்ச்சிகளையும் அவற்றின் சின்னங்களையும் பிரபலப்படுத்தியே அரசியல் செய்வார்கள். அதனால் முஸ்லிம் கட்ச்சிகளைத் தவிர்த்துவிட்டு தெற்கைப்போல வடக்கிலும் கிழக்கிலும் நேரடியாக முஸ்லிம் வேட்பாளர்களை களம் இறக்கக்கூடிய வாய்ப்பு உருவாகக்கூடும். தெற்க்கு முஸ்லிம்களின் அரசியலில் அதிக குழப்பமில்லை. வடகிழக்கு முஸ்லிம்களைப் பொறுத்து போர்க்காலத்தில் உருவாக்கிய தந்திரோபாயங்கள் காலாவதியாகிற ஆபத்துள்ளது. வடகிழக்கு முஸ்லிம்களைப்பொறுத்து பொறுத்து அரசியல் உத்திகள் தோற்றுப்போய்விட்டன. இதனை யாராவது வடகிழக்கு முஸ்லிம்களுக்கு உணர்த்த வேண்டும். போரில்லாத காலத்து புதிய சமநிலையை வடகிழக்கு முஸ்லிம்கள் இன்னும் முழுமையாக ஆய்ந்துணரவோ உள்வாங்கவோ இல்லை. இச்சுழல் தொடர்ந்தால் வடகிழக்கு முஸ்லிம் வாக்கு வங்கியும் தெற்க்கு முஸ்லிம்களின் வாக்கு வங்கிபோலவே இரண்டு பிரதான இங்கள கட்ச்சிகளின் பின்னே செல்ல நேரிடுடலாம். அப்போது அவை 40:60 என்றும் பிரிய வாய்ப்புள்ளது.
ReplyDelete