Header Ads



கோத்தபாய ஆட்சிக்கு வந்து 3 நாட்களில், கல்முனை தமிழ் செயலகம் வழங்கி, வியாழேந்திரனை அமைச்சராக்குவோம்

கிழக்கிலே வியாழேந்திரனை அமைச்சராக நியமித்து அபிவிருத்தியை முன்னெடுப்போம் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கல்முனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நற்பிட்டிமுனையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரச்சார கூட்டமொன்று நேற்று மாலை இடம்பெற்றிருந்தது.

இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2015ஆம் ஆண்டு எங்களை தோற்கடித்து தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்கள்? தங்களது பைகளை நிரப்பி கொண்டதை மாத்திரம் செய்தனர்.

நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் 17ஆம் திகதி முதல் முதலாம் திகதிக்குள் ஒரு இலட்சம் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்போம்.

இந்த அரசாங்கம் படித்த இளைஞர்களுக்கு தொழில் வழங்காது புறக்கணிப்பை செய்து வருகின்றது.

இந்த ஆட்சியில் விவசாயத்தில் மக்கள் நெருக்கடியை சந்தித்து தாய்மார்கள், பெண்களின் நகைகள் அடகு வைக்கப்பட்டு பெரும் பொருளாதார நெருக்கடியில் இருகின்றனர்.

கோத்தபாய ராஜபக்ச ஆட்சிக்கு வந்து அவற்றை மீட்டு எடுக்க கூடிய விதத்தில் விவசாயத்திற்கு பல்வேறு சலுகைகளை வழங்கி நகைகளை மீட்டெடுக்கும் பொற்காலமாக அமையும்.

கோத்தபாய ராஜபக்ச ஆட்சிக்கு வந்து மூன்றே நாட்களில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தி இந்த பிரதேச மக்களின் அவலத்தை துடைத்தெறிவார்.

இந்த நாட்டில் சிறுபான்மை, பெரும்பான்மை என்ற மரபு உடைத்தெறிந்து சகோதர இனம் என்றே பொதுஜன பெரமுன ஆட்சியில் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. சொல்லுங்க சொல்லுங்க -இனவாதமில்லாத அரசியலையும் ஆட்சியையும்தானே எம் சமூகம் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறது- எவ்வளுதான் நீங்க சொன்னாலும் உங்க கூட இருக்கும் இனவாதிகளின் சுயரூபாம் தேர்தலில் வென்றதும் தெரிய வரும் அப்போ விளங்கும் உங்களுக்கு வாக்களித்த முஸ்லீம் பெயர் தாங்கிகளுக்கு.மர்சூக் மன்சூர்- தோப்பூர்

    ReplyDelete
  2. KAKAKAKA MAMAPPA POOOO...THIS IS GOOD NEWS FOR THOSE IN MOTTU GANGE!!

    ReplyDelete

Powered by Blogger.