Header Ads



அநுரகுமார உள்ளிட்ட 33 பேர், கட்டுப்பணத்தை இழந்தனர்


தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களில், 33 பேரும் கட்டுப்பணத்தை இழந்துள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

1981 ஆம் ஆண்டின் அதிபர் தேர்தல் சட்டத்தின்படி, செல்லுபடியான வாக்குகளில் 12.5 வீதமாக வாக்குகளைப் பெறும் வேட்பாளர்களுக்கே கட்டுப்பணம் மீளச் செலுத்தப்படும்.

இந்தமுறை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தாபய ராஜபக்சவும் (52.25%), அவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த சஜித் பிரேமதாசவும் (41.99%) மாத்திரமே கட்டுப்பணத்தை மீளப் பெறுவதற்குத் தகுதியான வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

ஏனைய அனைவரும், 12.5 வீதத்துக்குட்பட்ட வாக்குகளையே பெற்றுள்ளதால், அவர்களுக்கு கட்டுப்பணம் மீளச் செலுத்தப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.