ஜனாதிபதி வேட்பாளர் இனிமேல், 30 இலட்சம் ரூபா கட்டுப்பணம் செலுத்த வேண்டும்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான கட்டுப்பணத் தொகையினை அதிகரிப்பது தொடர்பான ஒரு முன்மொழிவினை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு முன்வைத்துள்ளது.
அதன்படி ஒரு அரசியல் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் 25 இலட்சம் ரூபாவையும், சுயாதீன குழுக்கள் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் 30 இலட்சம் ரூபாவினையும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும்
தற்போதைய தேர்தல்கள் சட்டத்தின்படி, ஒரு அரசியல் கட்சியின் கீழ் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் 50 ஆயிரம் ரூபாவையும், ஒரு சுயாதீன வேட்பாளர் 75 ஆயிரம் ரூபாவையும் இதுவரை கட்டுப்பணமாக செலுத்தியிருந்த நிலையில் இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் ஒரு சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அதன்படி ஒரு அரசியல் கட்சியிலிருந்து மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் 7,500 ரூபாவையும் ஒரு சுயாதீன வேட்பாளர் 5,000 ஆயிரம் ரூபாவையும் கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.
Don't we need any other qualifications to be a president in our country?
ReplyDeleteஷபாஷ்.
ReplyDeleteவாக்குச் சீட்டின் நீளமும் 6 அங்குலமாக குறைக்கப்படுகிறது.
Well ,good idea
ReplyDeletewell done.
ReplyDelete