நடுவீதியில் நாயைப்பிடித்த முதலை, 30 நிமிடம் போராடி முதலையை உயிருடன் பிடித்த மக்கள் (படங்கள்)
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அமிர்தகழி எனும் பகுதியில் உள்ள வாவியில் அச்சுருத்தலாக காணப்பட்ட முதலைகளில் ஒன்று பொதுமக்களால் நேற்று 09 இரவு 11.00 மணி அளவில் மடக்கிப்பிடிக்கப்பட்டது.
கடந்த காலத்தில் மட்டக்களப்பு பகுதியில் முதலைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் நடமாடும் வீதியில் 12 அடி நீளமான முதலை வீதியில் நாயை பிடித்த நிலையில் ஓடிச் சென்று அருகில் உள்ள மாட்டுக் கொட்டகைக்குள் புகுந்து கொண்டது
இதன்போது அப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சுமார் 30 நிமிடம் போராடி முதலையை உயிருடன் பிடித்தனர்.
இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த வனத்துறையினர் பிடிபட்ட முதலையை வனத்துறை ஊழியர்கள் எடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.
முதலையும் உயிர் வாழ வேறொன்றை தங்கி வைத்து இருப்பது தவறில்லை மற்றும் நாய்களின் தொல்லையும் குறையும்.
ReplyDeleteமுதலைகளையும் நாய்களையும் பாதுகாத்து அவை மனிதர்களைக் கொலைசெய்யவும் அச்சுறுத்தவும் தான் மஹிந்த காலத்தில் சட்டமியற்றப்பட்டது. அதன் படி நாய்களுக்கு எங்கும் சுதந்திரமாக நடமாடலாம். ஆனால் அந்த சுதந்திரம் மனிதர்களுக்குக் கிடையாது.
ReplyDelete