இலங்கையிலிருந்து சென்ற 30 பயணிகளிடத்தில், 7.8 கிலோ தங்கம் பறிமுதல்
இலங்கையில் இருந்து வந்த விமானத்தின் பயணிகளை சோதனை செய்த போது, அதில் சில பயணிகளிடமிருந்து மொத்தம் 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் இருக்கும் சென்னை விமானநிலையத்தில் கடந்த சில மாதங்களாகவே தங்கம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
விமானநிலையத்தில் அதிகாரிகள் கெடுக்குப் பிடி சோதனை நடத்தினாலும், அதில் சிக்கினாலும் தொடர்ந்து கடத்தல் சம்பவம் நடந்து கொண்டே தான் இருக்கிறது.
இந்நிலையில் இலங்கையில் இருந்து சென்னை மீனப்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரக்கூடிய விமானத்தில் தங்கங்கள் கடத்தப்பட்டு வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதன் காரணமாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளும், விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளும் இலங்கையில் இருந்து விமானத்தில் வரும் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அப்படி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். ஆனால் அவர்கள் வைத்திருந்த பைகள் போன்றவைகளில் ஏதும் இல்லை.
அதன் பின் பயணிகளை முழுமையாக சோதனை செய்த போது, 30 பயணிகள் தங்கள் உள்ளாடைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்த முயன்றது தெரியவந்தது.
30 பயணிகளிடம் இருந்து சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான 7.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட 10 பெண்கள் உள்பட 30 பேரிடம் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிடிபட்டவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், வியாபாரிகள் போல இலங்கைச் சென்று தங்கத்தை கடத்தி வந்துள்ளனது தெரியவந்துள்ளது.
Post a Comment