Header Ads



எனக்கு வாக்களிப்பவர் 2 வது விருப்பு வாக்கை, வேறு ஒரு வேட்பாளருக்கும் வழங்கலாம் - அநுரகுமார

தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு வாக்களிக்க விரும்பும் எவருக்கும் தமது இரண்டாவது விருப்பு வாக்கை வேறு ஒரு வேட்பாளருக்கு வழங்கும் உரிமை இருப்பதாக அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது விருப்பு வாக்கு வேறு ஒரு வேட்பாளருக்கு வழங்கப்படும் பல்வேறு பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இது தொடர்பாக ஊடகம் ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர்,

அரசியல் ரீதியாக இரண்டு பிரதான முகாம்களில் உள்ள எவருக்கும் வாக்கை வழங்க முடியாது. அந்த இரண்டு முகாம்களுக்கு வாக்கை வழங்குவோர் இருவரில் ஒருவருக்கு இரண்டாவது விருப்பு வாக்கை வழங்க முடியும்.

அவர்களின் மேடையை எடுத்துக்கொண்டால் இந்த மேடையில் இருந்தவர்கள் மற்றைய மேடையிலும் இருக்கின்றனர். இதனால், அவர்கள் தமக்கிடையில் வாக்குகளை மாறி, மாறி அளிக்கக் கூடும். சில நேரம் கட்சி மாறியதை மறந்து போயிருக்கலாம்.

எனினும், எமக்கு வாக்களிப்போர், அவர்களுக்கு இரண்டாவது விருப்பு வாக்கை அளிக்க முடியாது. எனினும், எமது கட்சிக்கு வெளியில் ஒரு அணி இருக்கின்றது. அவர்கள் எமக்கு வாக்களிக்க விரும்பகின்றனர். எம்மை விரும்பும் அவர்கள் அடுத்த இரண்டு முகாம்களில் இருப்பவர்களில் யார் வெற்றி பெற்றால் சிறந்தது என்று நினைக்கும் வேட்பாளருக்கு இரண்டாவது விருப்பு வாக்கை வழங்கும் நிலைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளனர்.

இதனை நாங்கள் தடுக்க முடியாது. அது அவர்களின் உரிமை. இந்த தேர்தல் முறைக்குள் வாக்காளர்களுக்கு விருப்பு வாக்கை வழங்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

விருப்பு வாக்கை வழங்கும் முழுமையான உரிமை இருக்கின்றது. அந்த உரிமையை நாங்கள் எந்த வகையிலும் மறுக்க மாட்டோம். எனினும், எம்முடன் நேரடியாக இணக்கத்தில் உள்ளவர்கள் இரண்டு முகாம்கள் இருக்கும் எவருக்கும் வாக்களிக்க முடியாது என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.