இரத்தினபுரியில் பள்ளிவாசல் மீது தாக்குதல் - பொலிஸார் தீவிர விசாரணை, 2 பேர் கைது
(எம்.எப்.எம்.பஸீர்)
நேற்று -18- இரத்தினபுரி மாவட்டம், நிவித்திகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெட்டனிகேவத்த பகுதியில் பள்ளிவாசல் மீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. முச்சக்கர வண்டியொன்றில் வந்தவர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் இதன்போது பள்ளிவாசலின் கண்ணாடிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்த சம்பவம் குறித்து நிவித்திகல பொலிஸார் விஷேட விசாரணைகளை ஆரம்பித்த நிலையில் நேற்று சம்பவத்துடன் தொடர்புடைய இருவரைக் கைது செய்துள்ளனர். பிரதேசத்தின் சி.சி.ரி.வி. காணொளிகளை மையப்படுத்தி முன்னெடுத்த விஷேட விசாரணைகளில் முச்சக்கர வண்டியில் அவ்விருவரும் வந்து தாக்குதல் நடாத்துவது வெளிப்பட்டதாகவும் அதனடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
நிவித்திகல, கலவான வீதியிலுள்ள குறித்த கெட்டனிகேவத்த பள்ளிவாசல் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் கைதான இருவரில் ஒருவர் நிவித்திகல பகுதியில் மோட்டார் வாகன திருத்துநர் எனவும் சந்தேக நபர்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
But very soon he`ll reliase and file closed.
ReplyDeleteNever.. Everything will be controlled. hopefully unlike UNP's bloody government.
ReplyDelete