'கோத்தாபய இனி அமெரிக்க குடிமகன் அல்ல' - 2 ஓட்டைகள் விழுந்த கடவுச்சீட்டை வெளியாக்கின நாமல்
அமெரிக்க பதிவாளர் திணைக்களம் வெளியிட்டுள்ள மூன்றாவது காலாண்டுக்குரிய, குடியுரிமையைத் துறந்தவர்களின் பட்டியலில், கோத்தாபய ராஜபக்சவின் பெயர் இடம்பெறாதது, ராஜபக்சவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ உள்ளிட்ட ஐதேகவினர் சமூக ஊடகங்களில் இந்தப் பட்டியலை வெளியிட்டு, தீவிரமான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஹரின் பெர்னான்டோவுக்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள நாமல் ராஜபக்ச,
“பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை தொடர்பான சந்தேகங்களுக்கு அனைவருக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதோ ஆதாரம், இனி அவர் அமெரிக்க குடிமகன் அல்ல” என்று குறிப்பிட்டு, கோத்தாபய ராஜபக்சவின் குடியுரிமை துறப்பு ஆவணத்தின் பிரதியை இணைத்துள்ளார்.
பின்னர், அவர் தனது டுவிட்டரில், ரத்துச் செய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்சவின் அமெரிக்க கடவுச்சீட்டின் படத்தையும் வெளியிட்டுள்ளார்.
கோத்தாபய ராஜபக்சவின் கடவுச்சீட்டின் முதல் பக்கத்தில் ரத்து என ஆங்கிலத்தில் சிவப்பு மையினால் முத்திரை குத்தப்பட்டுள்ளதுடன், இரண்டு இடங்களில் துளையிடப்பட்டுள்ளது, அத்துடன் படம், மற்றும் விபரங்கள் அடங்கிய பக்கத்திலும், இரண்டு துளைகள் இடப்பட்டுள்ளன.
இப்படியும் ஏமாத்தலாம் என்று தெரிந்து வைத்திருக்கும் நாமல் இலங்கையிலும் மற்றும் பல நாடுகளில் பழைய கடவுச்சீட்டை இப்படித்தான் செய்து Cancel முத்திரை குத்துவார்கள்.
ReplyDeleteபோட்டோ ஏடிட்டோரில் எடிட் பன்னெழுமே.... நாட்டையே விற்றவங்களுக்கு இதெல்லாம் ஜுஜுபி...
ReplyDelete