18ம் திகதி கோத்தபய நாட்டை, விட்டுச்செல்கிறார் என்ற செய்தி பொய்யானது
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் பின்னர் அமெரிக்கா செல்லவுள்ளதாக வெளியாகியுள்ள விமானச் சீட்டு போலியானது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் 18ம் திகதி கொழும்பிலிருந்து டுபாய் ஊடாக லொஸ் ஏஞ்ஜல் நகருக்கு செல்லவுள்ளதாக விமான சீட்டை வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் செய்தியொன்று வெளியாகியுள்ளது.
எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தின் மூலமே அவர், இந்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான சாத்தியம் குறைவாகவே காணப்படுவதாகவும், அதனாலேயே கோத்தபாய ராஜபக்ச தேர்தலின் பின்னர் 18ம் திகதி நாட்டை விட்டு வெளியேற முயற்சித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
எனினும், இந்த செய்தியானது 100 வீதம் போலியான செய்தி என நாமல் ராஜபக்ச கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment