Header Ads



ரணில் ராஜினாமா..? 15 பேர் கொண்ட காபந்து அரசு தயார் - சு.க.க்கு 3

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பதவி விலகல் கடிதமானது, ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இன்று -20- பிற்பகல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்படும் வரை, காபந்து அரசாங்கம் ஒன்றை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த காபந்து அரசாங்கத்தின் பிரதமராக, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

15 உறுப்பினர்களைக் கொண்டதாக அமைக்கப்படவுள்ள காபந்து அரசாங்கத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் மூவரும் உள்ளடங்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.