கோட்டாபய 10 வீத வாக்குகளால் வெற்றி பெறுவார் - பசில்
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அதிகூடிய 10 வீத வாக்குகளால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார் என அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தற்போதைய ஜனாதிபதி ஒரு பாகுபாடற்றவர் என்றும் அவர் மனதளவில் தம் பக்கத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எப்படி பார்த்தாலும் சஜித் பிரேமதாச குறைந்த சதவீதவாக்குகளை பெற்ற இரண்டாவது ஜனாதிபதியாக வரலாற்றில் இடம்பெறுவார் எனவும் அவர் கூறினார்.
ஆர்.பிரேமதாச குறைந்த சதவீதவாக்குகளை பெற்று ஜனாதிபதியானதாகவும் ஆனால் இந்த முறை அவரின் புதல்வர் இதுவரை எதிர்தரப்பு வேட்பாளர் ஒருவர் பெற்றிராத குறைந்த சதவீத வாக்குகளை பெறுவார் எனவும் அவர் தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ஷ 10 வீத மேலதிக வாக்குகளை பெற்று வெற்றிப்பெறுவார் எனவும் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள 9 மாகாணங்களில் 7 இல் கோட்டாபய ராஜபக்ஷ நிச்சயம் வெற்றிபெறுவார் எனவும், அந்த மாகாணங்களில் உள்ள 120 தொகுதிகளில் அதிகூடிய வாக்கு சதவீதத்தை அவர் பெறுவார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment