சஜித் பிரேமதாசவிடம் Mp பதவி கேட்ட மலாய் சமூகத்தினர்
இந்த நாட்டில் வாழும் ஒர் இலட்சத்து 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலாய முஸ்லிம்கள் வாழ்கின்றனா். அவா்களுக்கு என பாராளுமன்ற பிரதிநிதி கடந்த 27 வருடங்களாக இல்லை. காலம் சென்ற ஜனாதிபதி ஆர்.பிரேமதாசா அவா்களினால் 1993ஆண்டில் தேசிய பட்டியல் மூலமாக மலாய சமுகத்தின் சாா்பாக எம்.எச் ஆமிதை பாராளுமன்ற பிரநிதித்துவம் வழங்கினாா். அதற்கு முன்னா் கலாநிதி ்டி.பி. ஜாயாவே மலாய சமுகத்தினருக்கு பிரநிதியாக இருந்தாா். ஆகவே இந்த நாட்டின் ஜனாதிபதியாக வர உள்ள சஜித் பிரேமதாச மலாயக சமுகத்தினருக்காக எதிா்காலத்தில் தங்கள் கட்சியான ஜ.தே.கட்சி ஊடாக ஒரு பாராளுமன்ற உறுப்பிணரை நியமிக்க வேண்டும். அதற்கான உத்தரவாத்தினைக் கேட்டு கேள்வி எழுப்பினாா். சட்டத்தரணி ரீ.கே. அசுர்
இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிரேமதாச எதிா்காலத்தில் பொதுத் தேர்தலின்போது ,இவ் விடயம் கவனத்திற்கு எடுக்கப்படுமெனவும் சஜித் உறுதியளித்தாா். அத்துடன் பெண்களுக்கு தணியான போக்குவரத்து வசதிகள் அளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசயாத்துறையில் ஈடுபடும் விவசாய்களுக்கு இலவச பசளை,வழங்கும் திட்டம் அவர்களது உற்பத்திகளை சந்தைப்படுத்தல் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்படும். ., மலேசியா, இந்தோனிசியா நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாத்துறை பயணிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்படும்.. ராகமப் பகுதயில் உள்ள ஓரே ஒரு பழமை வாய்ந்த பள்ளிவாசல் மலாய சமுகத்தினருக்காக அவை 24 மணித்தியாலயம் திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நாட்டில் சகல சமுகங்களும் ஒற்றுமையாகவும், வாழ்வதற்கு பாதுகாப்பு வழங்கப்படும். , போதைவஸ்த்து விற்பவர்கள் இதனை கொண்டுவருவா்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும்.
அஸ்ரப் ஏ சமத்
Post a Comment