பேஸ்புக் IN Box தகவல்களும் கண்காணிப்பு - இலங்கைக்கு சிறப்பு அதிகாரியையும் நியமித்தது பேஸ்புக்
சிறிலங்காவில் முகநூல் பயன்படுத்துனர்களால் உள்பெட்டியில் (inbox) பரிமாறப்படும் தகவல்களும் கண்காணிக்கப்பட்டு வருவதாக, முகநுநூல் சமூக ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது.
முகநூல் நிறுவனத்தின் சிறிலங்காவுக்கான கொள்கை திட்ட முகாமையாளர் யசாஸ் அபேவிக்ரம, கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியின் போதே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
முகநூல் நிறுவனம் முதல் முறையாக இலங்கையர் ஒருவர், இந்தப் பதவிக்கு நியமித்துள்ளது.
சிறிலங்காவில் அதிபர் தேர்தல் காலங்களில் போலிச் செய்திகள், மற்றும் இனவாதக் கருத்துக்கள் சமூக ஊடகங்களின் மூலம் பரப்பப்படுவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.
இந்த நிலையில், சமூக ஊடகங்களின் மூலம் போலிச் செய்திகள், இனவாதக் கருத்துக்கள் பரப்பப்படுவதை தடுப்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு சமூக ஊடக நிறுவனங்களுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment