முஸ்லிம்கள் பற்றிய சந்தேகங்களை நீக்கவே தேர்தலில் போட்டி - மஹாநாயக தேரரிடம் விளக்கிய ஹிஸ்புல்லாஹ்
இந்த நாட்டில் உறுதியான தலைமைத்துவம் உருவாக உங்கள் பங்களிப்பை வழங்குங்கள் ராமன்ஞ நிகாய மஹாநாயக தேரர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்விடம் தெரிவிப்பு.
ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் இன்று (31.10.2019) காலை கண்டிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது #ராமன்ஞ நிகாய மஹாநாயக நாபனே ப்ரேம ஶ்ரீ நாயக தேரர் அவர்களை நேரில் சந்தித்து தான் இந்த தேர்தலில் போட்டியிடுவது ஏன் என்று தெளிவூட்டியதுடன், தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருக்கும் விவரங்கள் தொடர்பிலும் முழு விளக்கம் வழங்கினார்.
இலங்கையில் வாழும் சகல இனத்தவர்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதுடன் பெரும்பான்மை மக்கள் மத்தியில் இருக்கும் முஸ்லிம்கள் பற்றிய தேவையற்ற சந்தேகங்களை நீக்குவதற்க்காகவுமே தான் இந்த தேர்தலில் போட்டியிடுவதாக மஹாநாயக தேரருக்கு கலாநிதி ஹிஸ்புல்லாஹ் எடுத்துக் கூறினார்.
ஹிஸ்புல்லாஹ்வின் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட மஹாநாயக்க தேரர் அவர்கள் இனங்களுக்கிடையில் ஒற்றுமை மிக அவசியமானது. கடந்த காலத்தில் நாம் வாழ்ந்ததை போல் ஒற்றுமையாக வாழ வேண்டும். பிரிவினைகள் இருக்கக் கூடாது.
குறிப்பாக எதிர்கால இளைஞர்களுக்கு இன ஒற்றுமையை கற்றுக்கொடுக்க வேண்டும். இன ஒற்றுமையில் தான் இந்த நாட்டின் வெற்றியிருக்கிறது. உங்கள் பணியை ஏற்றுக்கொள்கிறேன் என பாராட்டு தெரிவித்ததுடன் இந்த நாட்டில் உறுதியான தலைமைத்துவம் உருவாக உங்கள் பங்களிப்பை வழங்குங்கள் என்றும் ராமன்ஞ நிகாய மஹாநாயக நாபனே ப்ரேம ஶ்ரீ நாயக தேரர் அவர்கள் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்விடம் தெரிவித்தார்.
என்ன பங்களிப்பை இந்த ஹிஸ்புல்லாஹ் செய்யப்போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.-மர்சூக் மன்சூர்- தோப்பூர்
ReplyDelete