கனடாவில் மீண்டும், பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ
கனடாவின் 43ஆவது மக்களவை பொதுத் தேர்தலின் முடிவுகள் வெளிவர தொடங்கிய நிலையில், அந்நாட்டின் தேசிய ஊடகமான சிபிசி ஊடகத்தின் கணிப்பின்படி அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரண்டாவது முறையாக பிரதமராக வெல்லக்கூடும் என்ற நிலையில், அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.
லிப்ரல் கட்சியின் ஆதரவாளர்கள் இதனை விமரிசையாக கொண்டாட தொடங்கியுள்ளனர்.
முன்னதாக, கனடாவின் புதிய அரசை அமைக்கும் கட்சியை தேர்தெடுப்பதற்காக மக்கள் வாக்களித்த நிலையில், அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி முன்னிலை பெற்றுள்ளதாக ஆரம்ப முன்னணி நிலவரங்கள் காட்டின.
ஜஸ்டின் ட்ரூடோவின் லிப்ரல் கட்சியும், ஷீரின் கன்சர்வேட்டிவ் கட்சியும் சுமார் 34% வாக்குகளை பெற்றுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள்செய்திவெளியிட்டுள்ளன.
கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த ஆண்ட்ரூ ஷீரிடம் இருந்து கடும் போட்டியை ட்ரூடோ எதிர்கொண்டார்.
நியூ டெமாகிரட்டிக் கட்சியை சேர்ந்த ஜக்மித் சிங், பசுமை கட்சியை சேர்ந்த எலிசபெத் மே மற்றும் புளக் கியூபெக்வா கட்சியை சேர்ந்த கியூபெக் ஆகியோரும் இந்த தேர்தலில் வெல்ல போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில்தான் கனடாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பெண்கள் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment