கோட்டாபய குறித்து போலியான, வீடியோ பரப்பப்படுவதாக குற்றச்சாட்டு
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பு பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியினரால் போலியான காணொளி காட்சிகள் தயாரிக்கப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் நடவடிக்கைகளை வலுவிழக்கச் செய்யும் நோக்குடன் இவ்வாறு ஐக்கிய தேசிய கட்சியினரால் குறித்த போலியான காணொளி தயாரிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியினர் இணைந்து இன்று (29) முற்பகல் ராஜகிரிய பிரதேசத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உதய கம்மன்பில இதனை தெரிவித்தார்.
இந்த சூழ்ச்சி பல கட்டங்களின் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
காணொளி வௌியிடப்பட்ட பின்னர் பொதுமக்களை கோபமடையச் செய்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை ஏற்பாடு செய்யவும, பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் கத்தோலிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலம் ஊடக சந்திப்புக்களை நடாத்தி, கோட்டாபய ராஜபக்ஷயை கைது செய்வதற்கு அழுத்தம் கொடுப்பது குறித்த திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கை என அவர் சுட்டிக்காட்டினார்.
Post a Comment