Header Ads



"பஷில்­ ரா­ஜ­பக்ஷ பணத்தை கொண்­டு­வந்து தருவார், அதனை தனது பையினுள் போட்­டு­கொள்­வார்கள்"

தமது சுய­லா­பத்­துக்­கா­கவும், அமைச்சு பத­வி­க­ளுக்­கா­கவும் ஆசைப்­பட்டு நிபந்­த­னை­களை முன்­வைத்து பேரம்­பேசும் அர­சி­யல்­வா­திகள் எமக்கு அவ­சி­ய­மில்லை. எமது ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித்­பி­ரே­மே­தாச ஜனா­தி­ப­தி­யான பின்னர் பெருந்­தோட்ட தொழி­லா­ளர்கள் எதிர்­பார்த்து காத்­தி­ருக்கும் அனைத்து விட­யங்­களும் கட்­டங்­கட்­ட­மாக நிறை­வேற்­றப்­படும். அதற்­காக நாம்  புதிய வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க திட்­டங்­களை வகுத்­துள்ளோம் என பெருந்­தோட்ட கைத்­தொழில் அமைச்சர் நவீன் ­தி­ஷா­நா­யக்க தெரி­வித்­துள்ளார்.

அட்டன் நகரில் நேற்­று­ முன்தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் தேர்தல் பிர­சார கூட்­டத்தில் கலந்து கொண்டு மக்கள் மத்­தியில் உரை­யாற்றும் போதே அவர் இதனை தெரி­வித்தார். அவர் அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்,

 எமது தோட்­ட­தொ­ழி­லா­ளர்கள் தொடர்ந்தும் கஷ்­டங்­களை அனு­ப­வித்து வரு­கின்­றார்கள். அது தொடர்பில் புதி­தாக கூற எதுவும் இல்லை. தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 500ரூபாவில் இருந்து 720 ரூப­விற்கு அவர்­களின் சம்­பளம் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.  இருந்­தாலும் அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள சம்­பளம் போதாது. அமைச்சர் திகாம்­பரம் உள்­ளிட்ட மலை­ய­கத்தில் உள்ள ஏனைய அமைச்­சர்­களும் நானும் இணைந்து பல்­வேறு  பேச்­சுவார்த்­தை­களை மேற்­கொண்டு வரு­கிறோம்.

முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­தோடு புதிய வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்­க­வுள்ளோம்.

தோட்ட தொழி­லா­ளர்­களின் ஒரு நாள் சம்­பளம் ஆயிரம் ருபாய் என்­பது முக்­கி­ய­மா­னது. இதனை எவ்­வாறு பெறு­வது என்­பது ஒரு புற­மி­ருக்க தேயிலை தயா­ரிப்­பினை  எவ்­வாறு அதி­க­ரிக்­க­வேண்டும் என்­பது மறு­பு­ற­முள்ள சவால்­மிக்க விட­ய­மொன்­றாகும்.

அதே­வேளை தோட்ட தொழி­லா­ளர்­களின் பாது­காப்பு குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும். தேயி­லையின் வர­லாறு என்­பது 150வரு­டங்கள் கொண்­டது. ஆங்­கி­லே­யர்­களால் கொண்­டு­வ­ர­பட்­டது இந்த தோட்­டப்­பு­றங்­களில் உள்ள காணிகள் எமது தோட்­ட­பு­றங்­களில் உள்ள மக்­க­ளுக்கு இருந்­தது. ஆனால் ஆங்­கி­லே­யர்கள் அந்த காணி­யினை பெற்­று­க்கொண்­டார்கள். தமிழ் மக்­களை இந்­தி­யாவில் இருந்து கொண்­டு­வந்து இங்கு குடி­ய­மர்த்­தி­னார்கள். எங்­க­ளு­டைய சகோ­த­ரர்கள் மீது நாங்கள் அன்பு வைத்­துள்ளோம். எமது நாட்டில் தோட்­ட­தொ­ழி­லா­ளர்­களே அதி­க­மாக கஷ்­டப்­ப­டுக்­கின்­றார்கள்.

தோட்­ட­தொ­ழி­லா­ளர்­களின் வாக்­கு­களை சட்டை பையினுள் வைத்து கொண்டு மாறி மாறி கட்­சி­தாவும் அர­சி­யல்­வா­திகள் எமக்கு தேவை­யில்லை. மலை­ய­கத்தில் உள்ள சில அர­சியல் வாதிகள் காணப்­ப­டு­கி­றார்கள். யார் அதி­கூ­டிய பணம் தரு­கி­றார்­களோ அவர்­க­ளோடு பல்­வேறு நிபந்­த­னை­களை முன்­வைத்து இணைந்துக் கொள்­வார்கள்.

கடந்த ஜனா­தி­ பதி தேர்­தலின் போது அமெ­ரிக்க டொலர்  பெறு­மதி மூன்று மில்­லியன் ரூபா. இந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது அமெ­ரிக்க டொலர்  ஜந்து மில்­லியன். பஷில்­ ரா­ஜ­பக்ஷ பணத்தை கொண்­டு­வந்து தருவார். அதனை தனது பையினுள் போட்­டு­கொள்­வார்கள்.  வெளி­நா­டு­களில் உள்ள வங்கி கணக்கில் வைப்பு செய்து கொள்வர்.  இறு­தியில் ஸ்ரீ­லங்கா பொதுஜன பெர­மு­ன­வுடன் புரிந்­து­ணர்வை ஏற்படுத்தி கைச்­சாத்­திட்டு கொள்­வார்கள்.  பணத்­திற்­கா­கவும் அமைச்சு பத­வி­க­ளுக்­கா­கவும் ஆசைப்பட்டு நிபந்­த­னை­களை முன் வைத்து பேரம்­பேசும் அர­சி­யல்­வா­திகள் எமக்கு அவசியமில்லை.

அமைச்சர் திகாம்பரம் அவ்வாறு இல்லை. அவர் சாதாரண தோட்ட தொழிலாளியின் மகன் என்ற வகையில் தோட்டதொழிலாளர்களின் கஷ்டம், துன்பம், வேதனை போன்றவற்றை நன்கு அறிந்த அரசியல் தலைவர். அரசியல் தரகர் தொழிலை நாம் நிறுத்த  வேண்டும்.  இவர்களின் போலி நாடகத்தை  நன்றாக சிந்திப்பவர்கள் புரிந்து கொள்வார்கள் என் றார். 

No comments

Powered by Blogger.