பக்தாத்தியின் கொலைக்காக மகிந்த, அமெரிக்காவுக்கு நன்றி கூறாதது ஏன்..? ரணிலுடன் பேசிய டிரம்ப்
தமது ஆட்சியில் போதைப் பொருளை வர்த்தகம் முற்றாக அழிக்கப்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வத்தளை நகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க,
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நாங்கள் அனைவரும் கவலையடைக்கின்றோம். கிடைத்த தகவல்கள் குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறோம். இதன் காரணமாகவே நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமித்து விசாரணை நடத்தினோம்.
ஈஸ்டர் தாக்குதல் நடந்த தினத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் என்னை தொடர்புக்கொண்டு உதவி வேண்டுமா என்று கேட்டாளர். உதவி தேவை என்று நான் கூறினேன். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை முடிவுக்கு கொண்டு வர நாங்களும் உதவுகிறோம் என்று நான் அவரிடம் தெரிவித்தேன். இதனை கூறியதற்காக எதிர்க்கட்சியினர் என்னை விமர்சித்தனர்.
சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்க படையினர் அல் பக்தாதியை கொன்றனர். இதற்காக மகிந்த ராஜபக்ச, அமெரிக்காவுக்கு நன்றி கூறினாரா?. இது பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்றால் எப்படி தேசிய பற்றி பேச முடியும்.
ஐ.எஸ்.ஐ.எஸ். எதிரான போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும். பக்தாதி கொல்லப்பட்டார் என்பதற்காக அந்த அமைப்பு ஒழியவில்லை. எனினும் அந்த அமைப்பை முஎவுக்கு கொண்டு வருவது இலகுவாக மாறியுள்ளது. இதனை செய்ய நாம் சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment