Header Ads



"ரவூப் ஹக்கீம் மீது அபாண்டமான பழிசுமத்தி, தேர்தலில் வெற்றி பெறுவோம் என கனவு காண வேண்டாம்"

அமைச்சர் ரவூப் ஹக்கீம் மீது அபாண்டமான பழிகளைச் சுமத்தி தேர்தலில் வெற்றி பெறுவோம் என கனவு காண வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை - கிண்ணியாவில் இன்று காலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

இந்த நாட்டிலுள்ள ஒரு தேசியக் கட்சியின் தேசியத் தலைவருக்கு பழைய வீடியோக்களை காண்பித்து சிங்கள மக்கள் மத்தியில் கசப்பான உணர்வுகளை விதைக்க முனையாதீர்கள்!

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு தெரியும் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் நடை, உடை, பாவனை மற்றும் அரசியல் நடவடிக்கைகள். யாரையும் பொதுமேடைகளில் விமர்சிக்காத ஒரு சிறந்த அரசியல்வாதியை தென்னிலங்கை அரசியல்வாதிகள் வாக்குகளுக்காக வேண்டி மீண்டும் பிரச்சினைகளை ஏற்படுத்த பார்க்கின்றார்கள்.

இவ்வாறான பொய்களைக் கேட்டு மக்கள் வாக்களித்த காலம் மலையேறிவிட்டது. மீண்டும் நடைமுறைப்படுத்த முடியாது மக்கள் அனைத்தையும் அறிந்து வைத்துள்ளார்கள்.

சஹ்ரானுடன் தொடர்பில்லாத தூய்மையான அரசியல்வாதியை தொடர்புப்படுத்தி வீடியோக்களை வெளியிடுவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு வாக்குகளை பெற முடியும் என கனவுகள் காண வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் கட்சியின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

1 comment:

  1. முன்னால் செல்லுங்கள் தலைவரே.அவர்கள் அனைவரும் நிச்சயமாக ஓரங்கட்டப்படுவார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.