சுஜித்திற்காக தொலைக்காட்சியில் மூழ்கிய பெற்றோர்,, தண்ணீர் தொட்டியில் மூழ்கி பலியான மகள்
இந்தியாவின், திருச்சி மாவட்டத்தையே உளுக்கிய சம்பவமான சுர்ஜித் இறப்பின் துயரம் ஓய்வதற்குள்ளேயே மற்றமொரு அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுர்ஜித் மீட்பு நடவடிக்கைகளை தொலைகாட்சியில் கூர்ந்து பார்த்து வந்த பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைக்கு இப்படியொரு கதி நேரும் என கனவிலும் நினைத்து இருக்கமாட்டர்.
தூத்துக்குடி மாவட்டம் தெரசபுரத்தில் வசிப்பவர் மீனவர் லிங்கேஸ்வரனிற்கும் மனைவி நிஷாவிற்கும் ரேவதி சஞ்சனா என்ற இரண்டு வயது பெண் குழந்தையொன்று இருந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 25ஆம் திகதி மாலை 5.40 மணியளவில், ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுத்த சுர்ஜிதை மீட்க்கும் நடவடிக்கைகளை தொலைக்காட்சியில், பார்த்து வந்துள்ளபோது இரண்டு வயது ரேவதி தனது வீட்டில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து, கேட்பாரற்று துடிதுடித்து இறந்துள்ளார்.
சில நேரம் கழித்து குழந்தை காணவில்லை என அனைவரும் தேடவே, குழந்தையின் தந்தை குளியலறையில் சென்று பார்க்க, குழந்தையின் ஒரு கால் மட்டும் வெளியே தெரிந்துள்ளது.
உடனே, ரேவதியை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில், குழந்தையின் உயிர் ஏற்கனவே பிரிந்து விட்டதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அனைவரையும் பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குழந்தைகளை கவனயீனத்தால் அநியாயமாக கொல்லாதீர்கள் ! நெஞ்சு வலிக்குது!
ReplyDeleteஒரு விடயம் மனதை நொருக்க இன்னோரு குழந்தையின் இறப்பு செய்தி.இப்போது உள்ள பெற்றோர்கள் டீவில் மூழ்கி கிடப்புதுதான் இவ்வாறான வாழ வேண்டிய குழந்தைகளினை இழக்க காரணம்
ReplyDelete