சஜித் பிரேமதாஸவின் முதல் எதிரி, அவரது வாய்தான் - மஹிந்த
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் எதிரி அவரது வாய் தான் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பெலியத்த பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்களுடன் கை கோர்த்து உயிரை மாய்க்கவும் இன்று சிலர் தயாராக இருப்பதாக கூறுகின்றார்கள். மக்களை விட்டுவிட்டு தேவை என்றால் உயிரை மாய்த்துக் கொள்ளுங்கள்.
24 மணி நேரமும் செயலகத்தை திறந்து வைக்கவுள்ளதாக கூறினார்கள். 24 மணித்தியாலம் செயற்படுவதாக கூறி வந்தார்கள். எனினும் தற்போது இரவு 11 மணிக்கு உறங்கி அதிகாலை 4 மணிக்கு எழும்புவார்களாம்.
24 மணி நேரம் பணி செய்தால் முதுகெலும்பில் சக்தி இல்லாமல் போய்விடும் என நாங்கள் கூறியமையினால் சஜித் தரப்பினர் நேரத்தில் மாற்றம் கொண்டு வந்துள்ளனர்.
எனக்கு தெரிந்த அளவில் சஜித் தனது வாயாலே பாதிக்கப்படுகின்றார். அவர் பேசுவதே பிரச்சினையாக உள்ளது. அவருக்கு அவரது வாய் தான் முதல் எதிரியாக உள்ளது. அவர் பேசாமல் இருக்கும் வரை நன்மையாக இருக்கும் என மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment