ரவுப் ஹக்கீமை, கைதுசெய்ய வேண்டும் - அஜித் பிரசன்ன கொக்கரிப்பு
ஏப்ரல்21 தாக்குதலின் சூத்திரதாரி மொஹமட் சஹ்ரானின் சகோதரரான ரில்வான் ஹாசீம் என்பவருடன், அமைச்சர் ரவுப் ஹக்கீம் இருக்கும் படம் ஒன்று சமுக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
ஏப்ரல்21 தாக்குதலுக்குப் பின்னர் சாய்ந்தமருதில் உள்ள வீடொன்றில வைத்து, ரில்வான் என்பவர் குடும்பத்துடன் குண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துக் கொண்டார்.
இந்த புகைப்படத்தில், அமைச்சர் ஹக்கீமுடன், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சித்திக் ஃபாருக்கும் உள்ளார்.
இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு, அமைச்சர் ஹக்கீமை கைது செய்ய வேண்டும்என்று, தாய்நாட்டுக்கான இராணுவம் என்ற அமைப்பின் இணைப்பாளர் சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.
Post a Comment