Header Ads



"நாங்கள் தெரிவு செய்த ஜனாதிபதி வேறு கட்சியை, கட்டிப் பிடித்ததால் எமக்கு பெரிய தடையேற்பட்டது"

ஐக்கிய தேசியக் கட்சியினர் வாக்குகளை வழங்கி தெரிவு செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேறு கட்சியை பிடித்து கொண்டு கட்சிக்கு கெடுதல்களை செய்வதால், எமது கட்சியை சேர்ந்த ஒருவரை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வந்து, நமது பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்கும் பொறுப்பை கட்சியினர் ஏற்க வேண்டும் என அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஊருபொக்க பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினர் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் கடந்த காலத்தில் பல வேலைகளை செய்தது, வேலைகளை செய்யும் போது பல தடைகள் ஏற்பட்டன.

வெள்ளம், வறட்சி ஏற்பட்டதுடன் குப்பை மேடு சரிந்து விழுந்தது. 52 நாட்கள் அரசாங்கம் பலவந்தமாக பறிக்கப்பட்டிருந்தது. ஈஸ்டர் தாக்குதல் நடந்தது. இப்படி பல தடைகள் ஏற்பட்டன.

நாங்கள் தெரிவு செய்த ஜனாதிபதி வேறு கட்சியை கட்டிப் பிடித்துக்கொண்டதால் எமக்கு பெரிய தடையேற்பட்டது. கட்சியை பிடித்துக் கொண்டு அதற்கு மீண்டும் உயிரூட்ட முயற்சித்த போதே தடைகள் ஏற்பட ஆரம்பித்தன.

ஐக்கிய தேசியக் கட்சியினரே வாக்களித்து ஜனாதிபதியை தெரிவு செய்தனர். இறுதியில் கட்சியினருக்கே தொந்தரவுகள் ஏற்பட்டன.

எமது கால்களை பிடித்து இழுத்தாலும் நாட்டின் அபிவிருத்தி இலக்கை அடைய நாங்கள் பெரும் பங்கு வேலைகளை செய்தோம்.

மகிந்த - சந்திரிக்கா ஆட்சிக்காலத்தில் செய்ததை விட அதிகமான அபிவிருத்தி வேலைகளை கடந்த நான்கு ஆண்டுகளில் செய்தோம் எனவும் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. அதே பல்லவி தான் ஒங்களுக்கு திரும்பவும்.
    ஒங்க கட்சியின் தங்க தலைவர் கட்சிய விட்டுப் போகும் வரைக்கும் அல்லது நீங்களா அவர துரத்தி அடிக்கும் வரைக்கும் ஒங்க கட்சியும் உருப்படாது இந்த நாடும் உருப்படாது.

    ReplyDelete
  2. பதவிக்கு ஆசைப்படுபவர்கள் சுகபோகங்களுக்கு சோரம் போகாமல் சேவையாற்றவும் ஆசைப்பட்டு செயலாற்ற வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.