Header Ads



வெற்றி பெற்றபின் என்னுடைய, முதல் நியமனம் பொன்சேக்காதான்

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு நன்றிக்கடன் செலுத்தும் நடவடிக்கையை ஆரம்பிப்பதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார் 

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தான் வெற்றிபெற்ற பின்னர் தன்னுடைய முதல் நியமனம் சரத் பொன்சேகா எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

தன்னுடைய அரசாங்கம் அறிவு மற்றும் புத்திக்கூர்மையின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

நாட்டை பாதுகாத்த உண்மையான இராணுவ வீரர்கள் தன்னுடன் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.