Header Ads



ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில், இப்படியெல்லாம் நடக்கிறது

எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களில் 12 பேர் இரு முக்கிய வேட்பாளர்களின் வெற்றிக்காக பகிரங்கமாக பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக சுதந்திரமானதும்  நியாயமானதுமான தேர்தல்களுக்கான  மக்கள்  செயற்பாட்டு ( பெப்ரல் ) அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இவர்களுடள் ஏழு வேட்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்காக பிரசாரம் செய்து வருவதாகவும், மேலும் ஐந்து பேர் மற்றொரு வேட்பாளருக்காக பிரசராம் செய்து வருவதாகவும் பெப்ரல் அமைப்பின்  பணிப்பாளர்  ரோஹண  ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

ஆகவே இவ்வாறான வேட்பாளர்கள் தேர்தல் சட்டதிட்டங்களை மதித்து போட்டியிலிருந்து விலக வேண்டும்.

மேலும் ஒரு வேட்பாளர் தனது மக்களிடம் புகழ் பெற இனவாதக் கருத்துக்களை பரப்பும் வகையில் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்தும் வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில், ஒரு வேட்பாளர் தனது மக்களிடமிருந்து புகழ் பெற தீவிரவாத கருத்துக்கள் குறித்த பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

No comments

Powered by Blogger.