Header Ads



காட்டிக்கொடுத்த கோத்தபாயவை, ஜனாதிபதியாக்க முடியுமா..?

இறுதிப் போரில் சரணடைந்தவர்கள் தொடர்பாக எழுந்த கேள்வியின்போது படையினர் குற்றம் செய்யவில்லை என்று கூறாமல் மாறாக இராணுவத்தை தலைமைதாங்கிய படைத் தளபதியை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச காட்டிக்கொடுத்துவிட்டதாக சிவில் சமூக மற்றும் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

படையினரை இவ்வாறு காட்டிக்கொடுத்திருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை ஒருபோதும் ஜனாதியாக பதவியேற்க முடியாது என்றும் அந்த ஒன்றியம் கூறியுள்ளது.

பேராசிரியர் தம்பர அமில தேரர் இதனை கூறியுள்ளார். சிவில் சமூக மற்றும் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“கோத்தபாய ராஜபக்ச படையினரைக் காட்டிக்கொடுத்தவர். அவர் இராணுவத்தில் கேர்ணலாக பதவிவகித்தபோது, இராணுவத்தை விட்டுச்சென்றார்.

விடுதலைப் புலிகள் மல்ட்டி பெரல் மற்றும் பலவித நவீன ஆயுதங்களை வைத்து தாக்குதலை நடத்துவதால் அதற்கு ஈடுகொடுக்க முடியாதென ஓடிச்சென்றுவிட்டார்.

அப்போது தனது தலையில் ஏதோ ஆகிவிட்டது என்றும் தான் ஒரு பைத்தியம் என்று கூறியுமே இந்த நாட்டைவிட்டுச் சென்றார். அங்கேதான் அவர் காட்டிக்கொடுத்தார்.

ஆனால் விஜேவிமலரத்ன, டென்ஸில் கொப்பேகடுவ, ஜெனரல் பொன்சேகா உள்ளிட்டவர்கள் வடமராட்சி போர் உட்பட அனைத்தையும் வழிநடத்திய போதே கோத்தபாய நாட்டை விட்டுத் தப்பியோடினார்.

கடந்தவாரம் ஊடக சந்திப்பின்போது சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய சந்தர்ப்பத்தில் தனக்கு அதனுடன் தொடர்பில்லை என்றும் அதனை இராணுவத் தளபதியே செய்தார் எனவும் பதிலளித்தார்.

உலக வரலாற்றில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஒருவர், இராணுவத் தளபதியை காட்டிக்கொடுத்திருக்கிறாரா? தாமே மனிதாபிமான செயற்பாட்டை முன்னெடுத்தது?

எந்த அப்பாவி மக்களும் கொல்லப்படவில்லை, அப்படி தவறாக எவராவது செய்திருந்தால் அதற்கான பொறுப்பை ஏற்று, மின்சாரக் கதிரைக்குச் செல்ல தாம் தயார் என்றும், மாறாக இராணுவத்தில் எவரும் அவ்வாறு செய்யவில்லை என்பதையும் கூறியிருக்கலாம் தானே.

இல்லை, நானும், எனது சகோதரரும் அதனை செய்யவில்லை, இராணுவத் தளபதியே அதனை செய்ததாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை காட்டிக்கொடுத்துள்ளார் கோத்தபாய ராஜபக்ச.

இவ்வாறு படையினரைக் காட்டிக்கொடுத்த கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதியாக்க முடியுமா என்பதை இளைஞர்களிடம் கேட்கவிரும்புகின்றேன்” என அவர் கூறியுள்ளார்.

1 comment:

  1. LITRO GAS, INDA KOMPANIYIL
    IRUNDU, MILLION KANAKKIL PANAM
    PETRUKONDIRUKKUM, KAAVI UDAI ITHU

    BOUTHA MAKKALAI EMAATRUM PERVALI.

    ReplyDelete

Powered by Blogger.