Header Ads



தானே மீண்டும் பிரதமர் என ரணில் கூறுவது, வெறு கனவு மாத்திரமே ஆகும்

சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்றதும் அமைக்கவுள்ள அரசாங்கத்தில் தானே பிரதமர் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளமை அவரது அரசியல் ரீதியிலான கனவுகளை வெளிப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ரணில், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்றதும் அமைக்கவுள்ள அரசாங்கத்தில் தானே பிரதமர் என்று குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் இன்று பேசிய விமல், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்றதும் அமைக்கவுள்ள அரசாங்கத்தில் தானே பிரதமர் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளமை அவரது அரசியல் ரீதியிலான கனவுகளை வெளிப்படுத்தியுள்ளது.

நாட்டு மக்கள் 2015ம் ஆண்டு அரசியல் ரீதியில் தவறான தீர்மானத்தை முன்னெடுத்ததை கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின் ஊடாகக் திருத்திக் கொண்டார்கள். அன்றே ஐக்கிய தேசிய கட்சியை முழுமையாக புறக்கணித்து விட்டார்கள். மக்களின் ஆணையினை பெற்று அதிகாரத்தை பெற்றுக் கொள்ளமாட்டார்.

மீண்டும் தானே பிரதமர் என்று அவர் கருதுவது வெறும் கனவாகவே காணப்படும். முதலில் நாட்டு மக்கள் ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதன் பிறகே ஏனைய விடயங்கள் நாட்டு மக்கள் மீண்டும் அரசியல் ரீதியில் தவறான தீர்மானத்தை முன்னெடுக்க மாட்டார்கள் என்றார்.

1 comment:

  1. சதிகாரன் விமல்

    றணில் பிரதமர் ஆவதை மறுக்கப்போய் - சஜித் ஜனாதிபதி ஆவதை தன்னை அறியாமலேயே ஒத்துக்கொள்கிறான்.

    ReplyDelete

Powered by Blogger.