Header Ads



"தானே பிரதமர் என ரணில் கூறியதால், இக்கட்டான நிலையில் சஜித்"

ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷ வெற்றி பெற்றால் பிரதமராக மஹிந்த ராஜபக்க்ஷவே  வருவார் என கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.

இன்று -31- கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

எமது கூட்டணியை பொறுத்த வரையில் நாம் அனைவரும் மஹிந்த ராஜபக்க்ஷவையே பிரதமர் பதவிக்கே நிலை நிறுத்துவோம் என ஏகமனதாக தீமானித்துள்ளோம் ஜனாதிபதியாக பிரதம மந்திரியாக நீண்ட கால பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவை எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி பிரதமராக உருவாக்குவோம்.

அதே வேளை ஐக்கிய தேசிய கட்சியை  எடுத்து கொண்டால் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் ஆரம்ப கட்டத்தில் இருந்தே ஐ.தேகாவின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச யார் தமது பிரதமர் எனபதை பெயரிடாது தவிர்த்து வருகிறது. 

ஐ.தே.க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெரும் பட்சத்தில் யார் ஐ.தே.காவின் பிரதம மந்திரி என பொது மக்கள் மிகவும் ஆவலாக உள்ளனர் ஆனால் இக் கேள்வியை சஜித் பிரேமதாச தவிர்த்தே வருகிறார் இதற்கு நேற்று ஒரு பதில் கிடைத்துள்ளது அதாவது ஐ.தே.க அரசாங்கத்தில் தானே பிரதம மந்திரி என ரணில் விக்ரமசிங்க வெளிப்படையாக கூறியுள்ளார்.

சஜித் வெற்றி பெற்றால் தானே பிரதம மந்திரி என ஊடகவியலாளர் மாநாட்டில் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் இவ் அறிவிப்பு சஜித் பிரேமதசாவை இக் கட்டண நிலைக்கு தள்ளி உள்ளது இருப்பினும் இதற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை சுதந்திரம் கிடைத்து  நாடு கண்ட மிகவும் பலவீனமான பிரதமராகவும் தேர்களில் பல தடவைகள் தோல்வி அடைந்தவராகவும் தனது கட்சியால் ஓரங்கட்டப்பட்டவராகவும் ரணில் விக்ரமசிங்க காணப்படுகிறார். 

அவரது ஐ.தே.க கட்சியினாலேயே தலைமைத்துவத்திற்கு ரணில் விக்ரமசிங்க தகுதி  அற்றவர் என  தெரிவிக்கபட்டுள்ளது 

ரணில் கட்சி தலைமைக்கு தகுதி அற்றவர் நாட்டின் தலைமைத்துவதிற்கு தகுதி அற்றவர்,அத்துடன் அவர் ஒரு அரசியல் விபத்தானவர் பலத்த சர்ச்சையின் பின்னரே ஐ.தே.க வினால் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக  பெயரிடப்பட்டார். 

அத்துடன் தற்போது கொழும்பில் உள்ளவர்களினால் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவிற்கு ஊறு விளைவிக்கிறார் என ஊகங்கள் வெயிடப்படுகின்றன .

 நாட்டில் உள்ள எவருமே ரணில் விக்ரமசிங்க பிரதமர் ஆவதை விரும்பவில்லை ஏனெனில் இறுதியாக இடம்பெற்ற தேர்தலில் அவர் 28 சதவீத வாக்குகளையே பெற்றார் அல்பிட்டிய தேர்தலின் போது ஐ.தே.கவின் வாக்கு வங்கி 28ன் சதவீதத்தில் இருந்து 24 சதவீதத்திற்கு சரிவடைந்தது. எனவே ரணிலின் பிரதம மந்திரி பிரகடனத்தின் மூலம் எமக்கு பாரிய உந்து சக்தி கிடைத்துள்ளது.

எமது கணிப்பின் படி கோத்தாபாய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் 10 வீதம் முன்னணியில் உள்ளார் ரணிலின்  பிரதம மந்திரி அறிவிப்பின் படி எமது வாக்கு வங்கி மேலும் அதிகரிக்கும்.

எமது ஆய்வின் படி இரண்டாவது தேர்தல் வாக்கெண்ணிக்கைக்கு இடம் கொடாது எமது ஜனாதிபதி வேட்பாளர் அமோக வெற்றி பெறுவார் என அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.