51 சதவீதமான வாக்குகளுடனே, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன் - கோத்தா
ஜனாதிபதி தேர்தலினை தொடர்ந்து பொதுத்தேர்தலிலும் வெற்றிபெற்று பலமான அரசாங்கத்தினை அமைத்துக் கொள்ளும் நோக்கில் 17 கட்சிகளுடன் ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டமைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று -31- இலங்கை மன்ற கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது, இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாடு முன்னேற்றமடைய வேண்டுமாயின் அரச நிர்வாக கட்டமைப்பு அனைத்தும் இணக்கமாக செயற்பட வேண்டும். சிறந்த அரசாங்கத்தை செயற்படுத்த பாராளுமன்றத்தின் ஆதரவு இன்றியமையாதது. பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றிப் பெற்று பலமான அரசாங்கத்தினை தோற்றுவிப்பதற்காகவே 17 கட்சிகளுடன் கூட்டணிமைக்கப்பட்டுள்ளது.
நிச்சயம் பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றிப் பெறுவோம்.51 சதவீதமான வாக்குகளுடனே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன்.
நாடு தற்போத எதிர்க் கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாகவே தேர்தல் கொள்கை பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறுநெருக்கடிகளை எதிர்க் கொண்டுள்ள இளம் தலைமுறையினர் என்னால் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளார்கள். அனைவரது எதிர்பார்ப்பும் நிச்சயம் நிறை வேற்றப்படும் என்றும் கூறினார்.
Post a Comment