Header Ads



வாக்குச் சீட்டில் புள்ளடியிடுவதை, பேஸ்புக்கில் பதிவேற்றினால் 3 வருட சிறை

தபால் மூல வாக்களிப்பின் போது வாக்குச் சீட்டில் புள்ளடியிடுவதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடும் அரச அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தேர்தல் செயலகத்தில் இன்று (31) இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

தற்பொழுது தபால் மூல வாக்களிப்பு இடம்பெறுகின்றது. இந்த வாக்களிப்பை புகைப்படம் எடுத்து பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தரவேற்றம் செய்வது முற்றுமுழுதாக தடை செய்யப்பட்டுள்ளது. 

இவ்வாறு செயற்படும் ஊழியர்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குற்றமிழைத்தவராக கருதப்படும் சந்தர்ப்பத்தில் 3 வருட கால சிறைத்தண்டணை விதிக்கப்படும். இதற்கு உதவி ஒத்தாசை வழங்குவோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

இதேவேளை தற்பொழுது தபால் மூல வாக்களிப்பு அமைதியான முறையில் நடைபெற்றுவருவதாக கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இன்று காலையில் இருந்து பெரும் எண்ணிக்கையிலாக ஊழியர்கள் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

No comments

Powered by Blogger.