Header Ads



எமது விரக்தியை காட்டுவதற்காக 3 வது வேட்பாளருக்கு வாக்களிப்பது தேர்தல் உக்தியல்ல - ஹக்கீம்

பிரதான கட்சிகள் மீதான விரக்தியில் மூன்றாம் தரப்புக்கு வாக்களிப்பது பற்றி சிறுபான்மை சமூகம் சிந்திக்க முடியாது. இதன்மூலம் வாக்குகள் வீணடிக்கப்படுவதுடன், எதிரணி வேட்பாளர் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். சிறுபான்மை சமூகம் இவ்வாறானதொரு தவறை செய்யமுடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று (30) திருகோணமலை, கிண்ணியாவில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியதாவது;

ஏப்ரல் பயங்கரவாத தாக்குதலின் பின்னர் அச்சுறுத்தல்கள், பாதுகாப்பற்ற சூழல், அவதூறு குற்றச்சாட்டுகள், முஸ்லிம் தலைமைகளுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகள் என நாலாபுறங்களிலும் பலவிதமான நெருக்கடிகளை முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியது.

இத்தகைய இக்கட்டான சூழலுக்கு எமது சமூகத்தை ஆளாக்கிய தரப்பை வெற்றபெறச் செய்வதற்கு நீங்கள் வாக்களிக்கப் போகின்றீர்களா என்று சிந்தியுங்கள். இந்த ஜனாதிபதி தேர்தலானது முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய சவாலான தேர்தல் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

குருநாகல் வைத்தியர் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட போலிக் குற்றச்சாட்டுகளினால் பின்னணியிலிருந்த கும்பல்கள் இப்போது எந்த தரப்பில் சங்கமித்திருக்கின்ற என்று பாருங்கள். இந்த சூழலில் எங்கள் மத்தியில் வேறொரு தெரிவு இருக்கமுடியாது. ஆகவே, ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து நாங்கள் அனைவரும் ஒருமித்து தெரிவுசெய்த புதிய யுகத்தின் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கிறோம்.

1988ஆம் ஆண்டு ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியான பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக தற்போது சஜித் பிரேமதாச களமிறங்கியிருக்கிறார். நாங்கள் இவரை வேட்பாளராக பெயரிட்டமை குறித்து சிறுபான்மை கட்சிகள் என்றவகையில் பெருமை கொள்கிறோம்.

கடந்த அரசாங்கம் தொட்டு இன்றுவரை சிறுபான்மை சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்வதற்கு சஜித் பிரேமதாச தலைமையிலான அரசாங்கத்தில் உத்தரவாதமளிக்கலாம் என்ற திடமான நம்பிக்கையில்தான் நாங்கள் அவருடன் இந்தப் பயணத்தை ஆரம்பித்திருக்கிறோம். 

பிரதான கட்சிகள் மீதான விரக்தியின் அடிப்படையில் சிலர் மாற்றுக்கட்சிக்கு வாக்களிப்பது பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கின்றனர். பிரதான வேட்பாளர்களில் ஒருவர் 50% வாக்குகளை பெறாவிடின், மூன்றாவது வேட்பாளருக்கு அளிக்கப்படும் வாக்குகள் வீணாகிவிடும். சிறுபான்மை சமூகம் இவ்வாறானதொரு தவறை செய்யமுடியாது.

எமது விரக்தியை காட்டுவதற்காக மூன்றாவது வேட்பாளருக்கு வாக்களிப்பது தேர்தல் உக்தியல்ல. இத்தகைய செய்கையினால் தப்பித்தவறியாவது மாற்றுத் தரப்பு வென்றுவிட்டால், நாங்கள் இந்த மண்ணில் அடிமைகளாக வாழ்வதற்கு தயாரா என்பது குறித்து சிந்தித்துக்கொள்ளுங்கள். 

2 comments:

  1. சரியாக உணர்ந்திருக்கிறார் ஹக்கீம். அவரைப்போல் உள்ள அரசியல் விபச்சாரிகளால்; இன்று மக்கள் 3 வது தரப்பை தேடுகிறார்கள் என்பதை. உங்களைப்போன்ற விபச்சாரிகளின் சுகபோகத்திற்காக எங்களை அடகு வைத்ததினால் மக்கள் நாங்கள் காலாகாலமாக அடிமைகளாகத்தான் வாழ்கிறோம். மாற்றுதரப்பு வென்றுவிட்டால், அடிமைகளாக வாழ நீங்கள் தயாரா என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  2. ஐயா இது உங்களை எதிர்க்கட்சியில் அமரச்செய்வதற்கான இறைவனின் சதி.

    ReplyDelete

Powered by Blogger.