கருவை தாக்கத்தொடங்கியது சிரச Tv - ரணிலின் துரும்புச்சீட்டு எனவும் விளாசுகிறது
ஜனாதிபதி வேட்பாளராவதற்கான ஆயத்தம் தொடர்பில் தௌிவுபடுத்தும் வகையில் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று -17- அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார்.
தேரர்கள், புத்திஜீவிகள் உள்ளிட்டவர்களின் கருத்துக்களை செவிமடுத்து, தன்னை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்து ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவதாக இருந்தால், கட்சியின் யாப்பிற்கு அமைய அனைத்து தரப்பினரின் ஆசிர்வாதத்துடனேயே அது இடம்பெற வேண்டும் எனவும் கரு ஜயசூரிய இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி, நாட்டின் சுதந்திரத்தை வென்றெடுப்பதற்காக முன்நின்று செயற்பட்டவொரு கட்சியாகும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முதல் நிலை உறுப்பினராக செயற்பட்டதன் பின்னரே, SWRD பண்டாரநாயக்க சுதந்திரக் கட்சியை உருவாக்கினார். அதன்படி, சுதந்திரக்கட்சியின் உருவாக்கத்திற்கும் ஐக்கிய தேசியக் கட்சியே முன்நின்றுள்ளது.
சுதந்திரத்தின் பின்னர் பல தசாப்தங்கள் ஒருவர் அன்றி கட்சிக்கு தலைமைத்துவம் வழங்கிய ஏனைய அனைத்து தலைவர்களும் எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சியில் இருந்துகொண்டு இந்த கட்சியின் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர்.
எனினும், மிகப்பெரும் இந்த ஜனநாயகக் கட்சி ஒரு நபரினால் தொடர்ந்தும் வீழ்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லப்படுகின்றது.
தற்போது கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு புதிதாகக் கிடைத்துள்ள துரும்பே கரு ஜயசூரிய.
சபாநாயகர் பதவியுடன் எவ்வித தொடர்பும் இல்லாத அரசியல் விடயங்களை அவர் தன்னுடைய உத்தியோகப்பூர்வ கடிதத் தலைப்பில் ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்துள்ளார்.
தற்போது பூனை பொதியில் இருந்து வௌியே பாய்ந்துள்ளது!
யார் இந்த கரு ஜயசூரிய?
2007 ஆம் ஆண்டு 16 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கட்சியில் இருந்து பிரிந்து சென்று தனிப்பட்ட நோக்கத்திற்காக மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியவரே இந்த கருஜயசூரிய.
அதிகாரத்திற்கும் பதவிகளுக்கும் இருக்கும் பேராசை காரணமாக, தான் அழைத்துச் சென்ற 16 பேரையும் மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்திற்கு பலி கொடுத்து விட்டு, அவர் மாத்திரம் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நுழைந்தார்.
தலைவர் தொடர்ந்தும் கட்சியை தோற்கடித்து அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் பொழுது, கட்சி ஆதரவாளர்கள் கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் வேண்டும் என்ற போராட்டத்தை ஆரம்பித்தனர்.
கட்சிக்காக என்று கூறி அந்த சந்தர்ப்பத்தில் தேரர்களைக் கூட தவறாக வழிநடத்தி ரணில் விக்ரமசிங்கவின் துரும்பாக கரு ஜயசூரியவே அமைந்தார்.
பொய்யாக தலைமைத்துவ பேரவை என்று கூறி, அதன் தவிசாளர் என கூறிக்கொண்டு கட்சி ஆதரவாளர்களை ஏமாற்றிய கடந்த காலத்தை எவரும் மறக்க மாட்டார்கள்.
தலைமைத்துவ பேரவை செயலிழக்கும் பொழுது கரு ஜயசூரியவை ரணில் விக்ரமசிங்க கட்சியின் உப தலைவராக்கினார்.
இந்த சதித்திட்டம் காரணமாக இறுதியாக இரண்டு சந்தர்ப்பங்களில் கட்சியின் தலைவர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க முடியாமற்போனது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையினை இரத்து செய்வதாக பெரிதாக கதை கூறும் இவர், தூதரகங்கள் ஊடாக 19 ஆவது திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதியின் அதிகாரத்தை திருடுவதற்கு அமைச்சர்கள் முயன்ற போது எங்கே இருந்தார்?
வௌிநாட்டு சக்திகளை பாராளுமன்ற சபைக்கு கொண்டு வந்து அவர் பாதுகாத்த நாட்டின் இறைமை தான் என்ன?
உத்தியோகப்பூர்வ அதிகாரத்தை பயன்படுத்தி அரசியல் செய்யும் 78 வயதான கரு ஜயசூரிய வழங்கும் இந்த வாக்குறுதிகளை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?
ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிபெறச் செய்வதற்காக ரணில் விக்ரமசிங்க இதை செய்வதில்லை.
கட்சி வெற்றிபெற்றால் அவருடைய பதவிக்கு சவால் ஏற்படும் என்பதனால், 40 வருடங்களாக பல்வேறு பதவிகளை வகித்து மக்களின் பணத்தினை அனுபவிக்கும் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சியின் தலைவராக தொடர்ந்தும் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இவ்வாறு செயற்படுகின்றார்.
அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு கரு ஜயசூரிய மிகவும் பொருத்தமானவர்.
எனினும், கட்சி ஆதரவாளர்கள் மற்றும் நாட்டு மக்கள் வெற்றிபெறும் ஒரு வேட்பாளரை ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து எதிர்பார்க்கின்றார்களே தவிர, காட்டிக்கொடுக்கும் ஒருவரை அல்ல.
கட்சியினரின் நிலைப்பாடு என்ன?
ஜனாதிபதித் தேர்தலில் கரு ஜயசூரியவை களமிறக்குவதற்கு தாம் இணங்கவில்லை என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ஹர்ஷ டி சில்வா இன்று (17) இராஜகிரியவில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுடனேயே பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment