Header Ads



ஜனா­தி­பதி பதவியை ஒழிக்க, முழு ஆதரவு வழங்கத் தயார் - TNA

வரும் அதிபர் தேர்தலுக்கு முன்னதாக- நிறைவேற்று அதிகார அதிபர் பதவியை ஒழிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் முழுமையாக ஆதரிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

“இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியமான கொள்கையாக இருக்கிறது.

நிறைவேற்று அதிகார அதிபர் பதவியை ஒழிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் நாங்கள் ஆதரிப்போம். அதனை இப்போது முன்னெடுத்தாலும் ஆதரவு கொடுப்போம்.

நிறைவேற்று அதிகார அதிபர் பதவியை ஒழிப்பதாக கடந்த காலங்களில் பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.