ரணிலின் இறுதிநேரத் திட்டம் - தார்மீகமற்றதென Mp கள் சாடல்
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவிற்காக புதிய உறுப்பினர்களை இணைப்பதற்கான முயற்சி இன்று இடம்பெறுவதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் புதன்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவை கூட்டி, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ள உள்ள நிலையில், இவ்வாறானதொரு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற செயற்பாடுகள் தார்மீகமற்றதாகும் என ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில், எதிர்வரும் புதன்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவைக் கூட்டி இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளவதற்கு, ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வெளிநாடுகளுக்கு சென்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னதாக நாடு திரும்புமாறு பிரதமரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment