Header Ads



இன ரீதியாக பார்க்காதீர்கள், நாம் மிகவும் கவலையடைகிறோம் - உருகினார் ஞானசாரர்

வடக்கில் முன்னரான காலப்பகுதியில் தமிழ் மற்றும் சிங்களம் என்று அனைவரும் உயிரிழந்தார்கள். அப்போது அவர்களின் உடல்கள் அனைத்து இடங்களிலும்தான் புதைக்கப்பட்டன. அப்போது யாரும் எதிர்ப்பினை வெளியிடவில்லையே என கலகொட அத்தே ஞானசார தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பெளத்த மதகுருவின் பூதவுடலை தகனம் செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்ததுடன் அருகிலுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவினையும் மீறி நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

தேரரின் உடல் தகனம் செய்யப்படுவதற்கு முன்னர் களத்தில் நின்ற ஞானசார தேரர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு விவகாரத்தை இன ரீதியாக யாரும் பார்க்க வேண்டாம். நாம் மிகவும் கவலையடைகிறோம். ஒரு நாட்டில், ஒரு சட்டத்தின் கீழ்தான் நாம் அனைவரும் வாழ்கின்றோம்.

ஆனால், இன்று நீதிமன்றில் பிள்ளையார் ஆலயத்தின் சார்பாக முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகள், நாட்டின் சட்டத்திட்டங்கள் வடக்கு மற்றும் கிழக்குக்கு செல்லுபடியாகாது எனும் தொணியில்தான் கருத்து வெளியிட்டிருந்தனர்.

இதன் ஊடாக எமக்கு சில விடயங்கள் தெளிவாக விளங்குகிறது. இந்த சட்டத்தரணிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தேவைக்கு இணங்கவே செயற்படுகிறார்கள்.

வடக்கில், தமிழ் மற்றும் சிங்களம் என்று அனைவரும் உயிரிழந்தார்கள். அப்போது இவர்களின் உடல்கள் அனைத்து இடங்களிலும்தான் புதைக்கப்பட்டன. அப்போது யாரும் எதிர்ப்பினை வெளியிடவில்லை.

கொழும்பில், அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடன்தான் வாழ்ந்து வருகிறார்கள். அங்குள்ளவர்கள் இனங்களை வைத்து மனிதர்களுடன் பழகுவதில்லை.

ஆனால், இங்கு இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளமையையிட்டு நாம் மிகவும் கவலையடைகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

5 comments:

  1. இந்த இனவாதம் வட,கிழக்கு தமிழ் பிரதேசங்களில் அதிகமாக உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

    ReplyDelete
  2. your the reason for this racism. you start now you feel the pain

    ReplyDelete
  3. Nonsense. Arrest these Terror Monks first of all. Every one has to respect the Law.. Monks can not go against country LAW.
    'Arrest these Terror Monks"

    ReplyDelete
  4. Nonsense. Arrest these Terror Monks first of all. Every one has to respect the Law.. Monks can not go against country LAW.
    'Arrest these Terror Monks"

    ReplyDelete
  5. ரிசார்ட் சகோதரரே வடக்கில் எந்த தமிழ் பிரதேசத்தில் இனவாதம் உள்ளது ? அப்பிரதேசங்களை உங்களால் இனக்காட்ட முடியுமா ?????

    ReplyDelete

Powered by Blogger.