வேட்பாளர் தொடர்பில் இறுதி முடிவெடுக்க ரணில், கரு, சஜித் இன்று கலந்துரையாடல்
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றம் அக்கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையில் மற்றும் ஒரு கலந்துரையாடல் இன்று (22) இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பில் இறுதி முடிவு ஒன்றை எட்டும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல், சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இடையில் இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அக்கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
Post a Comment