"மும்மொழி" – மொழி பெயர்ப்பாளர் எம்.ஏ.எம்.ஸப்றின்
- பரீட் இக்பால் -
யாழ்ப்பாண முஸ்லிம்கள் வரலாற்றிலேயே, நீதி அமைச்சினால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட மும்மொழி – மொழி பெயர்ப்பாளர் இருவரில் இவரும் ஒருவராகும்.
யாழ்ப்பாணம் சோனகத் தெருவைச் சேர்ந்த அபூசாலிஹ் (ஆசிரியர்) - சரீனா சுல்பிக்கா தம்பதியினருக்கு 1973 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் திகதி மூன்று ஆண் பிள்ளைகளுள் மூத்தவராக பிறந்தார். சகோதர்களாக நிஸவ்ஸ், நஜா ஆவார்கள்.
ஸப்றின் ஆரம்பக் கல்வியை யாழ்.மன்ப உல் உலூம் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை யாழ்.ஒஸ்மானியா கல்லூரியிலும் உயர் கல்வியை கொழும்பு ஸாஹிரா கல்லூரியிலும்; கல்வி கற்றார் ஸப்றின் கொழும்பிலுள்ள துருக்கி பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.
ஸப்றின் யாழ்ப்பாணத்தில் யாழ்.யங்பேட்ஸ் கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்து சிறந்த சகல துறை ஆட்ட வீரராக கலக்கியவராவார். மேலும் கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் கால்ப்பந்தாட்டத்திலும் சிறந்து விளங்கிய வீரராவார். யாழ்ப்பாணத்தில் பல மீலாத் விழா, பேச்சுப் போட்டிகளில் பங்கு பற்றி பல தடவைகள் முதலிடத்தை பெற்றதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஸப்றின் 22.08.1994 இல் தேர்தல்கள் திணைக்களத்தில் முகாமைத்துவ உதவியாளராக முதல் நியமனம் பெற்றார். அதைத் தொடர்ந்து நிதி அமைச்சு வெளிநாட்டு அமைச்சு தூதரகம் , புனர் வாழ்வு அதிகார சபை, மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த சேவைகள் அமைச்சிலும் சேவையாற்றினார்.
இவர் 2002 – 2005 வரையான காலப்பகுதியில் பிரான்ஸிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் முக்கிய பதவி வகித்தவர். யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாற்றில் நான்காவது நபராக வெளிநாட்டு சேவைக்கு தெரிவானவர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இவர் அகில இலங்கை சமாதான நீதவனாக 2014 இல் நியமனம் பெற்றார்.
ஸப்றின் யாழ்பாணத்தைச் சேர்ந்த மர்ஹூம் - ஹாமிது (ஆசிரியர்) றபீக்கா தம்பதியினரின் மகள் ஜாயிஷாவை 04.02.2000 இல் திருமணம் செய்தார் - ஸப்றின் ஜாயிஷா தம்பதியினருக்கு இரண்டு ஆண்பிள்ளைகளும் (ஆதில், ஜூனைஸ் - கொழும்பு றோயல் கல்லூரி) ஒரு பெண்பிள்ளையும் (கதீஜா - லீட்தவே சர்வதேச பாடசாலை) உள்ளனர்.
தற்போது ஸப்ரின் 25 வருட அரச சேவையை கடந்து கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றுகிறார்.
ஸப்றின் 2016 – 2018 காலப்பகுதியில் சமூக சேவை அமைப்புக்களினால் தேசமானிய விருது, தேச கீர்த்தி விருது, தேசபந்து விருது, சமூக ஜோதிவிருது, சாமசிறி சமூகவிருது, ரத்தினதீப தேச அபிமான்யவிருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் என்பது முக்கிய விடமாகும்.
நீதி அமைச்சினால் நடாத்தப்பட்ட மும்மொழி (சிங்களம், தமிழ், ஆங்கிலம்) – மொழிபெயர்ப்பாளருக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து அங்கீகாரம் அளிக்கப்பட்ட மும்மொழி – மொழிபெயர்ப்பாளர் ஆவார்.
இவரது சமூக சேவைகள் தொடர அல்லாஹ் கிருபை செய்வானாக. ஆமீன்
Post a Comment