ரணிலிடம் நிலைமையை எடுத்துக்கூறுங்கள் - கருவிடம் சம்பிக்க வலியுறுத்து
நேற்று முன்தினம் இரவு சபாநாயகர் கரு ஜெயசூரியவை சந்தித்த அமைசர் சம்பிக்க ரணவக்க ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் எடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை,
ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் இந்த விடயத்தை கலந்துரையாடி அதில் பெரும்பான்மை ஆதரவை பெறும் நபர் யார் என்பதை பார்க்க வேண்டும். மக்களின் செல்வாக்கை பெற்றவரும் பிரபலமான நபராகவும் கட்சியில் இருப்பவரையே வேட்பாளராக களமிறக்க வேண்டும்.
அவ்வாறு களமிறக்கினால் மட்டுமே கூட்டணியாக எம்மால் வெற்றி பெற முடியும். இந்த விடயத்தில் இரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி இரகசியமாக வேட்பாளரை களமிறக்கி எந்த பயனும் இல்லை. ஆகவே இது குறித்து நீங்களும் கவனம் செலுத்த வேண்டும். தனித்து தீர்மானம் எடுத்தால் கட்சியாக இணைந்து பயணிக்கவும் எவரும் முன்வரப்போவதில்லை, கட்சி இரண்டாக பிளவுபடும். ஆகவே உங்களின் நிலைப்பாட்டை பிரதமரிடம் எடுத்து கூறி ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் ஒரு தீர்மானம் எடுக்க வலியுறுத்த வேண்டும் என்ற காரணிகளை அமைச்சர் சம்பிக்க ரணவக்க சபாநாயகர் கருஜயசூரியவிடம் வலியுறுத்தியுள்ளார்.
Post a Comment