Header Ads



ஐக்கிய தேசிய கட்சி அழிந்துவிட்டது - மஹிந்த

தேர்தல்கள் ஆணையகம் ஜனாதிபதி தேர்தலை அறிவித்துள்ள நிலையில் ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதற்காக நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் மோசடி என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

கரவனெல்ல பகுதியில் வைத்து இன்று -20-  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்ய முடியாமல் போன நிலையில் தலைவருக்கு எதிராக உப தலைவர் எழுந்துள்ளது கேலியான விடயம் எனவும் ஐக்கிய தேசிய கட்சி அழிந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் மக்கள் விடுதலை முன்னணியுடன் கலந்துரையாடுவேன் என கூறுவது வேடிக்கையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

1 comment:

  1. அதேபோல பொஹொட்டுவ கூட்டமும் அழிந்து ஒழியவேண்டும் என்று இந்த நாட்டு மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்கின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.