"ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடுவதனை, காலம் தாழ்த்துவது பிரதமர் கிடையாது"
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடுவதனை காலம் தாழ்த்துவது பிரதமர் கிடையாது என பிரதி அமைச்சர் நளின் பண்டார சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி கனவில் வாழ்ந்து வரும் சில அமைச்சர்களே ஜனாதிபதி வேட்பாளர் குறித்த தெரிவினை காலம் தாழ்த்தி வருகின்றனர்.
அமைச்சர்களின் கனவுகனை விடவும், கட்சியின் உறுப்பினர்களது கனவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
இந்த பிரச்சினை மேலும் நீடித்தால் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவினை யார் காலம் தாழ்த்தி வருகின்றார்கள் என்பதனை அம்பலப்படுத்த நேரிடும்.
கட்சிக்கு விரோதமாக மெய்யாகவே செயற்பட்டு வரும் தரப்பினருக்கு எதிராகவே ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Post a Comment