Header Ads



முஸ்லிம்களே எனது வெற்றியின், உரிமையாளராக மாறுங்கள் - கோத்தாபய அழைப்பு

அரசியல் எதிரணியினர் தான் சம்பந்தமாக செய்து வரும் பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாற வேண்டாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச, முஸ்லிம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முஸ்லிம் மக்கள் உட்பட அனைத்து இன மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே தனது எதிர்பார்ப்பு எனவும் அவர் கூறியுள்ளார்.

சிலாபம் கடையாகமோட்டை ஜூம்மா பள்ளிவாசலில் இன்று -22- மாலை சமய நிகழ்வில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.

முஸ்லிம் மக்கள் மத்தியில் என்னை பற்றி தவறான கருத்து பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. இப்படியான நடவடிக்கைகள் காரணமாவே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் மக்கள் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக வாக்களித்தனர்.

அத்துடன் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. அதிகளவில் வர்த்தகத்தில் ஈடுபடும் முஸ்லிம்களாகிய நீங்கள் எந்தளவுக்கு பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதை நன்றாக அறிவீர்கள்.

இதன் காரணமாக அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய அரசாங்கம் கடந்த 5 ஆண்டுகள் பொருளாதாரம் வீழ்ச்சியடைய இடமளித்தது.

தொடர்ந்தும் இந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தால், பொருளாதாரம் முற்றாக அழிந்து விடும். இதன் தாக்கத்தை நீங்களே அதிகமாக உணர்வீர்கள். நாட்டையும் அனைத்து மதங்களையும் சகல மக்களையும் மதிக்கும் கட்சியை நான் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன்.

எமது கட்சி வெற்றியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்புகளில் நாங்கள் அமோக வெற்றியை பெறுவோம் என்பது உறுதியாகியுள்ளது.

நீங்களும் அந்த வெற்றியின் உரிமையாளராக மாறுங்கள். பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாற வேண்டாம். நாட்டில் பாதுகாப்பு இல்லை என்பதால், நடந்ததை நீங்கள் கண்டீர்கள். மகிந்த ராஜபக்ச தலைமையில் நாங்கள் இந்த நாட்டை பாதுகாத்தோம்.

பாதுகாப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது. சிங்களம், தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களுக்கு பாதுகாப்பு முக்கியமானது. நாட்டில் காணப்பட்ட அமைதியான நிலைமை தற்போதில்லை.

அரசாங்கத்திற்கு நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறியுள்ளது. நாட்டில் காணப்பட்ட அமைதியான சூழல் தற்போது இல்லை.

பாதுகாப்பான நாட்டை உருவாக்குவது எமது பிரதான நோக்கம். அச்சமும் சந்தேகமும் இன்றி அனைவரும் வாழக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும் அவசியம் ஏற்பட்டுள்ளது எனவும் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

5 comments:

  1. முஸ்லிம்களைக் கொலைசெய்து அவர்களை இந்த நாட்டிலிருந்து வௌியேற்றுவதை சரியாகத் திட்டமிட்டு செயல்படுத்துபவன் இந்த காபிர என்பதை மட்டும் மட்டுப் புத்தியுடைய கூட்டங்கள் நன்றாக விளங்கிக் கொள்ளட்டும்.

    ReplyDelete
  2. "THE MUSLIM VOICE" will fully support Hon. Basil Rajapaksa's brilliant presidential election campaign which will be launched after the announcement, Insha Allah. Gotabaya Rajapaksa is a man of "WORD".
    “THE MUSLIM VOICE” is fully with Gotabaya Rajapaksa in his political journey to be the next President of Sri Lanka. The Muslims have begun to act on their own politically and have started to support Gotabaya, Insha Allah. “THE MUSLIM VOICE” will do all it is possible within it’s ability to make Gotabaya’s victory a success.
    The Muslim Youth and the young professionals of the community have begun to use “SOCIAL MEDIA” to challenge these scroundels. In the next elections, surely the Muslims are contemplating to vote the “Joint Opposition” to power. THEY WILL VOTE GOTABAYA RAJAPAKSA TO BECOME THE NEXT PRESIDENT OF SRI LANKA BECAUSE THEY CAN TRUST HIM TO SOLVE THE MUSLIM FACTOR ISSUES TOO, Insha Allah.
    Noor Nizam, Peace and Political Activist, Political Communications Researcher, SLFP/SLPP Stalwart and Convener – “The Muslim Voice”.

    ReplyDelete
  3. Definition: you mean Gota, rascal, a low, petty villain, a rogue, no-good, devil, wretch, monster (this is the definition that our dad chose for us, only a monster could irk an angel).

    Comment: If one is to go literally by the definition then of course, it would sound a little harsh. But, the meaning has changed over the centuries, and maybe it’s meaning is now diluted and become a little more favorable to use or utter - albeit in a playful manner.

    Had my father called us idiots, we wouldn't have even been perturbed to say the least, but a word like ‘scoundrel' really gives depth to a meaning provided that person is aware of the word in the first place. Whatever the context, it sure is a bad word.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. noblog ஜெ. ஆர். ஆட்சியில் யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்டது .கறுப்பு ஜூலை கலவரத்தில் 21 முஸ்லிம்கள் பலியானார்கள். பிரமதாச காலத்தில் யாழ்,மன்னார் முஸ்லிம்கள் வெளியேற்றம் செய்யப்பட்டனர் .பொலன்னறுவ பள்ளியாக் கொட,ஏறாவூர்,காத்தான்குடி போன்ற இடங்களில் முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டனர், சந்திரிக்கா காலத்தில் மடவளையில் 9 முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டனர், சந்திரிக்கா ரணில் ஆட்சியில் மாவனல்லை சிங்கள முஸ்லீம் கலவரம் மஹிந்த காலத்தில் பேருவளை கலவரம் மற்றும் மைத்திரி ரணில் நல்லாட்சில் கிந்தோட்ட ,அம்பாறை, திகன,நீர் கொழும்பு குளியாப்பிட்டி .ஆசனாக் கொட்டுவ, நாத்தாண்டி மற்றும் மின்வான்கொட முஸ்லீம் கலவரம்
    எந்த கட்சியின் ஆட்சி காலத்தில் அதிகம் சிறுபான்மை சமூகத்துக்கு பாதிப்பு ???

    ReplyDelete

Powered by Blogger.