தற்போது அலரி மாளிகையில் பேச்சில் ஈடுபட்டுள்ள சஜித்தும், ரணிலும்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான மற்றுமொரு சந்திப்பு இன்று -23- மாலை நடைபெறவுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பான நீண்டகால பேச்சுவார்த்தையின் ஒருகட்டமாக இன்றைய சந்திப்பும் இடம்பெறவுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை அலரிமாளிகையில் இரவு 9.30க்கு இடம்பெறும் என்று தகவல் அறிந்த தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்திப்பில் சபாநாயகர் கருஜெயசூரிய கலந்து கொள்ள மாட்டார் என்பதோடு, இன்றைய பேச்சுவார்த்தையில் மேற்கொள்ளப்படும் தீர்மானம், கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
Post a Comment