Header Ads



பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம், வாங்கிக்கட்டிய தயாசிறி

நாடாளுமன்றில் வாய்மூல கேள்விநேரத்தின்போது, கேள்வியெழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு சபாநாயகர் கருஜயசூரிய காட்டமாக பதிலளித்தார்.

தனது, கேள்வியை தயாசிறி ஜயகேர கேட்கின்றாரா என, சாபாநாயகர் பெயர் சொல்லி அழைத்தார்.

அதற்கு தயாசிறி ஜயசேகர :- “அதிமேதகு ஜனாதிபதி அவர்களே நான் கேட்கிறேன்.... ஆ.. மன்னியுங்கள்... மன்னியுங்கள்!” என்றார்.

அதற்கு சபாநாயகர்  :- “ நாடாளுமன்றம் கேலிக்கூத்துக்கான இடமல்ல... சுயநினைவுடன் கேள்விகளை கேளுங்கள். நாடாளுமன்றம் என்பது முக்கியமான இடம்.  தேவையற்ற விடயங்களை கதைக்க வேண்டாம்” என்றார்.

No comments

Powered by Blogger.