Header Ads



ரஷ்யாவில் ஆரம்பமாகியுள்ள சர்வதேச, கூட்டுறவு மாநாட்டில் முஹம்மது றியாஸ்


மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு  இளைஞர் வலுவூட்டல் கூட்டுறவுச் சம்மேளனத்தின் தலைவர் எம்.எஸ்.எம். ரியாஸ் ரஷ்யா சென்றுள்ளார்.இரண்டு நாட்கள்(19,20) நடைபெறும் இம்மாநாட்டில் உலகின் பல பாகங்களிலிருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இதில் கலந்து கொள்வதற்காக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் கெ.டி.என் ரஞ்சித் அசோக , இ. வ.கூ தலைவர் முஹம்மது ரியாஸ் மற்றும் கூட்டுறவு பிரதிநிதிகள் சென்றுள்ளனர்.

இம்மாநாடு நேற்று (19) ஆரம்பாகி இன்று (20) நிறைவடைகிறது.கூட்டுறவுத் துறையை வலுப்படுத்தி இளைஞர்களின் செயற்பாடுகள், இலக்குகளை வெற்றி கொள்வது,இவ்வெற்றிக்குத் தடையாகவுள்ள காரணிகளைக் கண்டறிந்து அவற்றைக் களைவது,நுகர்வோர் தொடர்பில் பொதுவான கொள்கை வகுப்பது உள்ளிட்ட முக்கிய விடயங்கள் இம்மாநாட்டில் பேசப்படவுள்ளன.இதில் வரவேற்புரை யை ரஷ்யாவின் பிரதிப் பிரதமர், அலக்சிகோர்டிவ், ரஷ்யாவின் கலுகோ பிராந்திய ஆளுநர் அனாற்ரொலி ஆகியோர் நிகழ்த்துவர். இரண்டாவது நாளாக நடைபெறும் மாநாடு நுகர்வோர் கூட்டுறவு எனும் தொனிப்பொருளில் இடம்பெறுகிறது. இதில் "நுகர்வோர் கூட்டுறவுக் கொள்கைகள் 2030" பற்றி மார்க் வில்லற்ஸ் உரை நிகழ்த்துவார்.இம்மாநாட்டில் பங்றே்கச் சென்றுள்ள இளைஞர் வலுவூட்டல் கூட்டுறவுச் சம்மேளனத் தலைவர் ரியாஸ் இலங்கையில் கூட்டுறவுத் துறையின் செயற்பாடுகள் குறித்தும் கருத்துக்களை முன்வைக்கவுள்ளார். 

No comments

Powered by Blogger.