ஜனாதிபதி வேட்பாளராக, கரு போட்டியிடமாட்டார் - உறுதிப்படுத்தினார் மருமகன்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட போவதில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
அலரி மாளிகையில் நேற்று மாலை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களின் பேச்சுவார்த்தையில், சபாநாயகரின் மருமகனான அமைச்சர் நவீன் திஸாநாயக்க, சபாநாயகரின் நிலைப்பாட்டை தெரியப்படுத்தியுள்ளார்.
கரு ஜயசூரிய, அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க மற்றும் நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவர்களில் ஒருவரான ரவி ஜயவர்தனவுடன் நடத்த பேச்சுவார்த்தைகளின் பின்னரே தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளார்.
அதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குமாறு சபாநாயகர் கடிதம் மூலம் கோரியதாக கூறப்படும் செய்தியை மறுத்து அவரது ஊடக செயலாளர் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதனிடையே ஆங்கில செய்தித்தாள் ஒன்றிடம் கருத்து வெளியிட்டிருந்த, சபாநாயகர் கரு ஜயசூரிய, அடுத்த தலைமுறையை பிரதிநிதித்துவப்படுத்தும் சஜித் பிரேமதாச, அவருக்கு வழங்கும் பொறுப்புகளை சரியான முறையில் நிறைவேற்றும் நபர் எனக் கூறியுள்ளார்.
வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்துள்ள அமைச்சர் சஜித்தின் இயலுமை மற்றும் முதிர்ச்சியை பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment