Header Ads



குறுகிய காலத்திற்குள் பொருளாதாரத்தையும், தேசிய பாதுகாப்பினையும் பலப்படுத்துவோம் - கோத்தபய

குறுகிய காலத்திற்குள் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்ததை போன்று  பொருளாதாரத்தையும்,  தேசிய பாதுகாப்பினையும் பலப்படுத்துவோம் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கூட்டுறவு துறையின் தேசிய மாநாடு கொழும்பில் உள்ள தேசிய கண்காட்சி காட்சிப்படுத்தல் கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது. இதன்போது கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இன்று நாடு  பொருளாதார ரீதியிலும், தேசிய  பாதுகாப்பு  தொடர்பிலும் பல நெருக்கடிகளை எதிர்க் கொண்டுள்ளது. இந்நிலைமை தொடர்ந்து நீடித்தால் பல எதிர் விளைவுகள் ஏற்படும்.  இவ்வாறான  பல சவால்கள் 2005ம் ஆண்டு  மஹிந்த ராஜபக்ஷ  ஜனாதிபதியாகும்போது முன்காணப்பட்டது.  30வருட  பயங்கரவாதம்  தேசிய பொருளாதாரத்திற்கும், தனி மனித சுதந்திரத்திற்கும் பாரிய தடையாக காணப்பட்டது.

 30 வருட கால  சிவில் யுத்தத்தை குறுகிய காலத்திற்குள் முடிவிற்கு கொண்டு வருவதற்கு பலமான ஒரு தலைமைத்துவத்தின் கீழ் திட்டங்கள் வகுக்கப்பட்டன. குறுகிய காலத்திற்குள் யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டு பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டு,  ஆரம்ப  கட்டங்களும் செயற்படுத்தி வெற்றியும் அடைந்து அடுத்த  செயற்பாடுகளுக்காக திட்டங்கள் வகுக்கப்பட்ட  நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டன.

ஆட்சி மாற்றத்தில் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான வழிமுறைகள் முன்னெடுக்கவில்லை. தேசிய உற்பத்திக்கும், தேசிய பாதுகாப்பிற்கும் இன்று  எந்நிலையில் காணப்படுகின்றது என்பதை தெளிவுப்படுத்த வேண்டிய அவசியம் தேவையில்லை. 

ஆகவே இவ்விரண்டும் இன்று  எமக்கு ஒரு சவாலாக காணப்படுகின்றது.  குறுகிய காலத்திற்குள் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்ததை போன்று  பொருளாதாரத்தையும்,  தேசிய பாதுகாப்பினையும் பலப்படுத்துவோம் என்றார்.

2 comments:

  1. பாரிய மங்கொள்ளைக்கான இடங்களும்,தளங்களும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருக்கும் என நம்புகின்றோம்.

    ReplyDelete
  2. Nichayam....rombawe mudippinga ungada anaitthu walakkuhalayyum...

    Nichayam ungada arasiyal nermayyaaha illa...
    Inankalin warihalai kondu perum paanmay ilakkay adayya oduweerhal...sila sirupaanmay ungalodu sernthu odatthaan wendum enra thoniyil konjam...bt 1 think perum.paanmay makkal emaaruwaarhal enra nambikkay undu....

    ReplyDelete

Powered by Blogger.