சஜித் பக்கம், சரிந்தார் முஜிபுர் ரகுமான் - மங்களவின் வீட்டு ஊடகவியாலாளர் மாநாட்டிலும் பங்கேற்பு
எதிரணியினரைப் பொறுத்தவரை அவர்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், வடகிழக்கில் பிரிவினைவாதத்திற்கு எதிராகவும், தற்போது சஹ்ரான் போன்ற அடிப்படைவாதிகளின் பயங்கரவாதத்திற்கு எதிராகவும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோஷத்தை வலுப்படுத்துவதன் ஊடாக இந்தத் தேர்தல் நாட்டின் தேசிய பாதுகாப்பை முன்னிறுத்தியது என்றும், அதற்காகவே மக்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் ஒரு சிந்தனையைப் தெற்கில் பரவலாக விதைக்கின்றார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இன்றய தினம் -23- ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்தும் கூறியதாவது,
உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்று சில மாதங்களிலேயே நாம் ஜனாதிபதித் தேர்தலுக்கு முகங்கொடுத்திருக்கின்றோம்.
இந்நிலையில் நாட்டின் தேசிய பாதுகாப்பு என்பது ஜனாதிபதித் தேர்தலின் முக்கிய பிரசாரப்பொருளாக மாறியிருக்கிறது. நாட்டின் பாதுகாப்பை முன்னிறுத்தி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றார்.
எதிரணியினரைப் பொறுத்தவரை அவர்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், வடகிழக்கில் பிரிவினைவாதத்திற்கு எதிராகவும், தற்போது சஹ்ரான் போன்ற அடிப்படைவாதிகளின் பயங்கரவாதத்திற்கு எதிராகவும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோஷத்தை வலுப்படுத்துவதன் ஊடாக இந்தத் தேர்தல் நாட்டின் தேசிய பாதுகாப்பை முன்னிறுத்தியது என்றும், அதற்காகவே மக்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் ஒரு சிந்தனையைப் தெற்கில் பரவலாக விதைக்கின்றார்கள் என அவர் இதன்போது தெரிவித்தார்.
தற்போதுள்ள அரசுகூட இம்மூன்று விடயங்களுக்கும் எதிராகத்தான் செயல்படுகிறது
ReplyDeleteஎனவே எதிரணியினர் இதுபற்றி பெரிதாக
கூறுவதற்கோ அல்லது செய்வதற்கோ ஒன்றுமில்லை.ஆகவே முஜீபுர்றஹ்மான் அவர்களே
இதுபற்றி பெரிதாக எண்ணத்தேவையில்லை.
அதுமட்டுமல்ல தற்போது எல்லா இன மக்களிலும்
பெரும்பாலான மக்கள் இம்மூன்று விடயங்களுக்கும் எதிராகத்தான் உள்ளனர் ஆனால்
சர்வதிகாரத்திற்கு பெரும்பாலான மக்கள் எதிரான வர்கள் என்பதும் உண்மையே.