தேர்தல் கூட்டத்திற்கு, கொழும்புக்குச் சென்றவரை காணவில்லை
கொழும்பில் இடம்பெற்ற அரசியல் கட்சி கூட்டம் ஓன்றிக்கு அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் இருந்து மேலும் சிலருடன் கடந்த ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி சென்ற நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பலாந்தோட்டை, ரிதியகம பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் கடந்த மாதம் 18 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற அரசியல் கட்சி கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்று மீண்டும் வீடு வந்து சேரவில்லை என அம்பலாந்தோட்டை பொலிஸாருக்கு கடந்த மாதம் 21 ஆம் திகதி முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
காணாமல் போன நபரின் மூத்த சகோதரியால் இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போன நபர் திருமணம் ஆகாதவர் என தெரிவிக்கப்படுகிறது.
அவர் தனிமையில் வாழ்ந்து வந்ததாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.
காணாமல் போன நபர் தொடர்பில் அம்பலாந்தோட்டை மற்றும் கோட்டை பொலிஸ் நிலையங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
Post a Comment