Header Ads



எங்கே வியாழேந்திரன் போகவில்லையா..? என்று கேள்வி கேட்பது வேடிக்கையாகவுள்ளது..!

முல்லைத்தீவு - பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் நேற்று பெளத்த மதகுருவின் பூதவுடல் நீதிமன்ற உத்தரவிற்கும் மீறி தகனம் செய்யப்பட்டமையானது ஒட்டுமொத்த தமிழர்கள் மத்தியில் கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் வியாழேந்திரன் எம்.பியால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

இந்த நாட்டில் கடந்த கால வரலாறுகளை எடுத்து கொண்டால் சட்டத்தின் அடக்குமுறையினால் வடக்கு மற்றும் கிழக்கில் வாழ்கின்ற தமிழர்களே அதிகம் பாதிப்புக்குள்ளாக்கப்படுகின்றனர்.

இன்று ஆலய வளாகத்திற்குள் பெளத்த மதகுருவின் பூதவுடலினை கொண்டு சென்றமையானது இலங்கையில் வாழ்கின்ற இந்துக்களின் மத்தியில் பெரும் அசெளகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிர்களையும், தமிழர்களின் வழிபாட்டு ஸ்தலங்களையும் கேவலப்படுத்தும் வேலைகளை ஒரு சில தேரர்கள் அரங்கேற்றியமையானது ஒட்டுமொத்த தமிழர்களுக்கு எதிரான வன்முறையாகவும், தமிழர்களை அடக்கியாளும் செயற்பாடாகவுமே என்னால் பார்க்கப்படுகின்றது.

என்னை பொறுத்தவரையில் இலங்கையில் தமிழர்கள் பாதிக்கப்படுகின்ற போது தமிழர்களின் உரிமை மறுக்கப்படுகின்ற போது அது இலங்கையின் வடக்கு மாகாணமாக இருந்தாலும், கிழக்கு மாகாணமாக இருந்தாலும், மலையகமாக இருந்தாலும் எனது இனம் பாதிக்கப்படும்போது எமது உறவுகளுக்காக எப்போதும் எனது குரல் ஒலித்துக் கொண்டு தான் இருக்கும் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

கடந்த காலங்களில் தமிழர்களின் சாத்வீகமான, நீதியான, நியாயமான போராட்டங்களை எனது மாவட்டத்தில் நான் பல முறை முன்னெடுத்து சென்ற போது எனது அழைப்புக்கள் எதுவும் இல்லாமல் பல பெளத்த தேரர்கள் கலந்து கொண்டார்கள்.

அவர்கள் எங்கள் இனம் சார்ந்த போராட்டங்களில் கலந்து கொண்ட போது ஒரு சில அரசியல்வாதிகளுக்கு சொந்தமான போலி முகநூல்களில் நான் சிங்களத்திற்கு அடிமையாகிவிட்டதாகவும், சிங்களத்திற்கு சோரம் போய்விட்டதாகவும் புனைக்கதைகளை கூறி மக்கள் மத்தியில் திரிவு படுத்தினார்கள்.

என்னை பொறுத்தவரை நான் எனது மக்கள் சார்ந்த போராட்டங்களில், எனது மக்களின் நீதி வேண்டி என்னால் அவர்கள் அழைக்கபடவில்லை என்றாலும், அவர்கள் கலந்து கொண்டால் நான் வரவேற்க தயார், அதே நேரம் ஏதோ ஒரு வழியில் இது போன்றவர்களின் அடக்குமுறையோ அல்லது அதிகார பிரயோகமோ இருக்குமாயின் நான் அதை பார்த்து வேடிக்கை பார்த்தவனும் அல்ல.

அவர்களை எதிர்ப்பதில் நான் பின் நிற்க போவதும் இல்லை என்பதை இந்த இடத்தில் கூறிக்கொள்கின்றேன்.

அத்தோடு இனியும் வேடிக்கை பார்க்கும் அரசியல், நல்லிணக்கம் என்ற போர்வையில் தமிழர்களை வாழ்வியல் ரீதியாக பின்தள்ளப்படும் அரசியல் தமிழர்கள் மத்தியில் மாற்றப்பட வேண்டும்.

இன்று கிழக்கு மாகாணத்தில் இருந்து கொண்டு மாற்றினத்தினை சேர்ந்த ஒருசில அரசியல்வாதிகளும், அவர்களின் அடிவருடிகளும் இந்த நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழர்களின் உரிமை மறுக்கபட்டுவிட்டது எங்கே வியாழேந்திரன் போகவில்லையா என்ற கேள்வி சமூக வலயத்தில் உலாவருவதானது ஒரு வேடிக்கையாகவுள்ளது.

காரணம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் காணிகளையும், தமிழர்களின் வழிபாட்டு தளங்களையும் அபகரித்ததும், அடித்து நொறுக்கியவர்களும் இவர்களை போன்றவர்களே என்பதை கூறிவைக்க விரும்புகின்றேன்.

இவ்வாறு சமூக வலைத்தளங்களில் எம்மை திரிவுப்படுத்தி, மேற்கோள் காட்டி அதில் அரசியல் இலாபம் அடைய நினைப்பவர்களுக்கு ஒரு விடையத்தினை தெட்ட தெளிவாக கூற நினைப்பது என்னவென்றால் தமிழர்களை எதிர்த்து தமிழர்களின் அபிலாஷைகளை மறுத்து எப்போதும் நான் சிங்களவர்களோடு சேர்ந்து பயணிக்க போவதில்லை என்பதை கூறிக்க கொள்ள விரும்புவதோடு எந்த தேசிய கட்சிகளோடும் பேரம் பேசி எனது மக்களுக்கான நியாயத்தை பெற்று கொடுக்க முன் நிற்பேன்.

தமிழர்கள் தங்களது ஜனநாயகம் மறுக்கப்படுகின்ற போது அதை வேடிக்கை பார்த்து எம்போதும் நான் பின் நின்றதும் இல்லை நிற்க போவதும் இல்லை இதனாலேயே நான் மாற்று சமூகத்தினாலும், ஒருசில நல்லிணக்கவாதிகளாலும் நான் இனவாதியாக பார்க்கப்படுகின்றேன்.

அதை பற்றி நான் எப்போதும் சிந்திப்பதில்லை நான் எப்போதும் முன்னெடுப்பது பறிக்கப்பட்ட, முடக்கப்பட்டு கொண்டிருங்க தமிழர்களின் நியாயமான கோரிக்கையை மாத்திரமே.

எதிர்காலத்தில் இப்படி பட்ட காட்டுமிராண்டி தனங்கள் தமிழர்கள் மத்தியில் இடம் பெறுகின்ற திட்டமிட்டு திணிக்கப்படுகின்ற செயற்பாடுகள் நிறுத்தப் பட வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு என்பது தமிழர்கள் அதிகம் இணைந்து வாழ்கின்ற பூமி இருந்த போதிலும் அங்கு பாதிக்கப்படுவது அதிகம் தமிழர்களே வடக்கு மற்றும் கிழக்கு சார்ந்த அரசியல் ரீதியான முன்னெடுப்பிற்கு எப்போதும் இதய சுத்தியுடன் நான் பயணிக்க என்னை தயார்ப்படுத்தி வைத்திருப்பேன் என்பதை கூறிக்கொள்கின்றேன் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 comments:

  1. அதெல்லாம் சரி. ஞானசாரருக்கு எதிராக case போடுவதற்கு வேலையை பாருங்க

    ReplyDelete
  2. கல்முனையில் நீங்கள் உண்ணாவிரதம் இருக்கும் போதே சொன்னோம்.உங்கள் பக்கம் கத்தியை திருப்ப அவர்கள் பார்க்கும் ஒத்திகை என,ஆனால் நீங்கள் குடை வரை பிடித்தீர்கல்.இப்போது புரிந்ததா எந்தளவுக்கு உங்களை முட்டாள்கலாக்கி இரு இனங்களையும் பிரிப்பதர்க்கு போட்ட அவர்களின் திட்டங்களை.இனியாவது உங்களின் அரசியல் ஒட்டுக்காக அடுத்த இனத்தின் மீது வீண் அபாண்டங்கலை கட்டுக் கதைகளை கூறி அப்பாவி தமிழர்களை உசுப்பேத்தாமல் இனியாவது நேர்மையான அரசியல் செய்து திருந்தி வாழ முர்படுங்கல்

    ReplyDelete
  3. ஒரு இந்து கோவில் சம்பவத்திற்காக தமிழ்ர்கள் முழு எதிர்ப்பை காட்டுகிறார்கள்.

    ஆனால், கடந்த சில வருடங்களாக நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்கள் எரிக்கப்பட்டன-உடைக்கப்பட்டன-தடைசெய்யப்பட்டன.
    இந்த முஸ்லிம்கள் கோளைகளாக எப்போதும் அடிவாங்கிக்கொண்டே இருக்கிறார்கள் தானே

    ReplyDelete
  4. அஜன் நீ 30 வருடங்களாக அடிவாங்கிக்கொன்டு கோழையாக இல்லாமல் என்ன வீரனாகவா இருந்தாய்.

    ReplyDelete
  5. ஒன்றரரை இலட்சம் பேர் ஒட்டு மொத்தமாக அநியாயமாக தீவிரவாதத்தின் பெயரால் கொல்லப்படுவதைவிட பத்துப்பேர் அடிவாங்குவதால் ஒன்றும் ஆகிவிடாது,

    ReplyDelete
  6. பாசிசப் புலிப் பயங்கரவாதிகளின் வாரிசுகளுக்கு எங்கே விளங்கிவிடப் போகிறது கோழைகளுக்கும் உணர்வுகளுக்குக் கட்டுப்படாமல் தூரநோக்கோடு சமூகத்திற்காய் சிந்திக்கும் ஒரு சமூகத்திற்கும் இடையிலான வித்தியாசம். ஒரு காலத்தில் புலிகளின் வாரிசாக வாழ்ந்த தமிழர்கள் இன்று மனநோயாளிகளாக வாழ்கிறார்கள். Ajan Antony தமிழன் என்று சொன்னால் மட்டும் போதுமா தமிழை எழுத்துப் பிழையில்லாமல் எழுதவும் வேண்டுமே.

    ReplyDelete
  7. we consider you champion fighter for the rights of Tamils so make fast until the concerned arrested

    ReplyDelete

Powered by Blogger.